சென்னை:
வேளச்சேரி தொகுதி பா.ம.க. வேட்பாளர் மு.ஜெயராமன் பெசன்டநகர் ஊரூர் குப்பம், கக்கன்காலனி பகுதியில் இன்று வீடு வீடாக சென்று ஓட்டு கேட்டார். முன்னாள் மத்திய மந்திரி ஏ.கே. மூர்த்தி பிரசாரத்தை தொடங்கி வைத்தார்.
அப்போது முன்னாள் மத்திய மந்திரி ஏ.கே. மூர்த்தி பேசியது:-
கடந்த 5 ஆண்டுகளில் தேர்தல் வாக்குறுதிகளை தி.மு.க. அரசு நிறைவேற்றி உள்ளது. தொடர்ந்து மக்கள் நல திட்டங்கள் நிறை வேற தி.மு.க. மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரியுங்கள். பா.ம.க. வேட்பாளர்கள் உங்கள் வேலைக்காரர். இந்த தொகுதி வேட்பாளர்கள் ஜெயராமன் மண்டல குழு தலைவராக இருந்து அடிப்படை தேவைகளை நிறைவேற்றி வருபவர். அவரை எம்.எல்.ஏ.வாக தேர்வு செய்யுங்கள்.
மாதம் தோறும் உங்கள் பகுதிக்கு நேரில் வந்து குறைகளை கேட்டு தீர்த்து வைப்பார். என்றும் மக்கள் சேவகர்களாக பா.ம.க. உறுப்பினர்கள் வேலை செய்வார்கள். அவருக்கு நீங்கள் வாய்ப்பு அளியுங்கள். இவ்வாறு அவர் பேசினார்.
பிரசாரத்தில் ரவி, மணி, வளவன், தமிழ்செல்வன், அரிகிருஷ்ணன் உள்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக