பரமத்திவேலூர் சட்டமன்றத் தொகுதி பா.ம.க. வேட்பாளர் வடிவேல் கவுண்டரை ஆதரித்து பா.ம.க.நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பிரச்சாரம்

பரமத்திவேலூர்:

               பரமத்திவேலூர் பா.ம.க. வேட்பாளர் வடிவேல் கவுண்டரை ஆதரித்து பா.ம.க.நிறுவனர் டாக்டர் ராமதாஸ்  பரமத்தி வேலூர் காமராஜர் சிலை அருகே நடந்த கூட்டத்தில் பேசினார்.

பா.ம.க.நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர் கூறியது:-

                 தேர்தல் ஆணையம் சர்வ..சர்வ...சர்வ... வல்லமை படைத்த தேர்தல் ஆணையம். தேர்தல் அதிகாரிகள், பறக்கும் படையினரின் வாகன சோதனை என்ற பெயரில் விவசாயிகள், வியாபாரிகள், பொதுமக்கள் என அனைவரும் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் சிறு வியாபாரிகள் வியாபாரம் செய்யாமல் முடங்கி போய் உள்ளனர். இதனால் பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுவரை இல்லாத அளவுக்கு சோதனை நடப்பது வியப்பாக இருக்கிறது.

                 தேர்தல் ஆணையத்தின் இந்த போக்கு நியாயமானது அல்ல. கலைஞர் ஒரு அறிக்கை வெளியிட்டார். அந்த அறிக்கையை நீதிபதி பார்த்து விட்டு தகவலின் அடிப்படையில் மட்டுமே சோதனை செய்ய வேண்டும் என்றார். தேர்தல் வாக்குறுதிகள் கொடுக்கிற மாதிரியாக இருக்க வேண்டும், அறிவிக்க மாதிரியாக இருக்க கூடாது.  கடந்த சில நாட்களுக்கு முன் கலைஞர் தேர்தல் அறிக்கை வெளியிட்டார். அதே அறிக்கையை பின்பற்றி ஜெயலலிதாவும் வெளியிட்டுள்ளார். பள்ளி குழந்தைகள் காப்பி அடிப்பது போல் உள்ளது. 
 
                  பள்ளி குழந்தைகள் காப்பி அடித்தால் தண்டனை கொடுக்கிறீர்கள், அதே போல் அ.தி.மு.க.வுக்கு பொதுமக்கள் நீங்கள் தண்டனை கொடுக்க வேண்டும். தமிழ்நாடு முழுவதும் நான் சுற்றுப்பயணம் செய்து பெண்களிடம் விசாரித்த போது அவர்கள் கலைஞருக்குத் தான் ஓட்டு என்று சொன்னார்கள். எனவே கலைஞருக்கு ஆதரவு அலை அதிகளவில் உள்ளது. தமிழக மக்களிடம் ஜெயலலிதா 4 ஆடு, 3 மாடு தருவதாக கூறி மக்களை ஆடு, மாடு மேய்க்க சொல்கிறார். கலைஞர் கம்ப்யூட்டர் கொடுத்து உங்களை உயர்த்துகிறார். ஜெயலலிதா ஆடு, மாடுகளை கொடுத்து பின்னுக்கு தள்ளுகிறார். நீங்கள் முன்னேற வேண்டாமா? என்றார். தொடர்ந்து பா.ம.க.வேட்பாளர் வடிவேல் கவுண்டருக்கு மாம்பழம் சின்னத்தில் ஓட்டு கேட்டார்.

                 இந்த கூட்டத்தில் மத்திய மந்திரி காந்திசெல்வன், கே.பி.ராமலிங்கம், எம்.பி., தொகுதி பொறுப்பாளர் பார்இளங்கோ, முன்னாள் எம்.எல்.ஏ மலையப்ப சாமி, நெடுஞ்செழியன் எம்.எல்.ஏ., தி.மு.க. ஒன்றிய செயலாளர் கே.எஸ். மூர்த்தி, மற்றும் கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர்.

1 கருத்துகள்:

dakaraidakila சொன்னது…

தொப்புளில் பம்பரம் விட்ட நடிகர் பாமகவை குறை கூறியுள்ளான். இந்த நடிகருக்கு தொகுதி மக்கள் யாராவது ஆங்கிலத்தில் மனு கொடுத்தால் படிக்க தெரியுமா ? இல்லை அர்த்தம் தான் சொல்ல தெரியுமா?. இட ஒதுக்கீடு என்றால் என்னவென்று தெரியுமா ? தியாகம் என்றால் என்னவென்று தெரியுமா ? மக்கள் பிரச்சினைக்காகவும், உரிமைக்காகவும் தெருவிலும், அரசு அலுவலகங்கள் முன் போராட தெரியுமா? மக்கள் முன்னேற்றதிர்க்கு நல்ல அறிவுரைதான் சொல்ல தெரியுமா. இந்த கூத்தாடிக்கு அரசியல் சாசனம் பற்றித்தான் தெரியுமா? சமுதாயம் என்றால் என்னவென்று தெரியுமா? "சின்ன கவுண்டர்" என்ற சமுதாயம் சார்ந்த படத்தில் "வக்கிரமாக" பெண்ணின் தொப்புளில் பம்பரம் விட்ட நடிகரை தமிழ்நாட்டு பெண்கள் புறக்கணிக்க வேண்டும். குறிப்பாக "கவுண்டர்" என்ற சாதி அடைமொழி கொண்ட கொங்கு வெள்ளாளர் மற்றும் வன்னியர்கள் அனைவரும் புறக்கணிக்க வேண்டும். இந்த காட்சியை ஆபாச படத்தில் காட்ட வேண்டியதுதானே?. அப்போ தமிழ் பண்பாட்டை கெடுப்பதுதானே இந்த தெலுங்கனின் குறிக்கோள். விருத்தாசலம் தொகுதியில் மக்களுக்கு எதுவும் செய்யாத இவன் ரிஷிவந்தியம் தொகுதியில் நிற்கிறான். எனவே இந்த தொகுதி மக்கள் தகுந்த பாடம் புகட்ட வேண்டும். விருத்தாசலம் தொகுதி மக்களை கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும். இந்த தேர்தலில் 2.5 கோடி வன்னியர்களும் டாக்டர் அய்யாவின் கரத்தை வலுப்படுத்த வேண்டும்.