தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஐந்து தொகுதியிலும் ஐனநாயக முற்போக்கு கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெற பாடுபட வேண்டும்: பா.ம.க.நிறுவனர் ராமதாஸ்

தர்மபுரி:

               பா.ம.க.,வை விமர்சனம் செய்ய தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்துக்கு எந்த தகுதியும் இல்லை,'' என, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார்.
 
               தர்மபுரியில் நடந்த ஜனநாயக முற்போக்கு கூட்டணி கட்சிகளின் செயல்வீரர்கள் கூட்டத்துக்கு, முன்னாள் எம்.பி., செந்தில் தலைமை வகித்தார். 

தர்மபுரியில் பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் பேசியது:

                தமிழகத்தில் கட்சி நடத்தும் ஒரு நடிகர் என்னைப்பற்றி பல இடங்களில் பேசி வருகிறார். என் மீது அவதூறாக ஏதேதோ பேசுகிறார். இதுநாள் வரை அவருக்கு நான் பதில் சொன்னதில்லை. இப்போது சொல்கிறேன். அந்த நடிகர் அரசியலில் அரிச்சுவடி தெரியாதவர். அவர் என்னை பற்றி பேசுவதா? கடந்த 2006ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலுக்கு முன் கட்சி ஆரம்பித்தார். அந்த தேர்தலில் தனித்து போட்டியிட்டார். அப்போது அந்த நடிகர் ஜெயலலிதா பற்றி கடுமையாக விமர்சித்தார். 

                 நம்பக தன்மை இல்லாதவர் என்று கூறினார். இன்னும் ஏதேதோ கூறினார். தைரியம் இருந்தால் தனியாக போட்டி போடுங்கள் என்று கூறினார். ஆனால் தற்போது அ.தி.மு.க.வுடன் கூட்டணி சேர்ந்துள்ளார். கேட்டால் ஜெயலலிதாவுடன் கூட்டணி இல்லை. எம்.ஜி.ஆருடன் கூட்டணி வைத்துள்ளோம் என்று கூறுகிறார். இதனை அ.தி.மு.க. தொண்டர்கள் நினைத்து பார்க்க வேண்டும். அரசு ஊழியர், ஆசிரியர்கள் மீது அடக்குமுறை ஏவிய ஜெயலலிதா குறித்து 2009 மார்ச் 28ல், தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் பேசியதை அ.தி.மு.க., தொண்டர்கள் மறக்கக் கூடாது. தன் கையெழுத்து இல்லையென கூறிய ஜெயலலிதாவிடம் நாட்டை ஒரு போதும் மக்கள் ஒப்படைக்கக் கூடாது என, பேசிய விஜயகாந்த், மக்களை ஏமாற்றும் வகையில் இது நாள் வரை யாருடனும் கூட்டணி இல்லையென கூறிவிட்டு, தற்போது அ.தி.மு.க.,வுடன் கூட்டணி அமைத்துள்ளார். பல இடங்களில் தே.மு.தி.க., கட்சியைப் பற்றி நான் விமர்சனம் செய்வதில்லை. ஆனால், விஜயகாந்த், பா.ம.க.,வை பற்றி விமர்சனம் செய்வதை பொறுத்துக் கொள்ள முடியாது.

                 அரசியலின் அரிச்சுவடி தெரியாத விஜயகாந்த், பா.ம.க., பற்றி விமர்சனம் செய்ய தகுதியில்லை. கேட்டு பெறும் இடத்தில் பா.ம.க., உள்ளது; கொடுக்கும் இடத்தில் தி.மு.க., உள்ளதால், பா.ம.க.,வுக்கு ஒதுக்கிய சட்டசபை தொகுதிகளை அமைதியாக வாங்கிக் கொண்டது. தனித்து நின்று தன் பலத்தைக் காட்டிய பென்னாகரம் தொகுதியை தி.மு.க., வேட்பாளர் இன்பசேகரனுக்கு விட்டுக் கொடுத்ததை தி.மு.க.,வினர் நினைத்து, தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஐந்து தொகுதியிலும் ஐனநாயக முற்போக்கு கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெற பாடுபட வேண்டும் என்றார்.

2 கருத்துகள்:

dakaraidakila சொன்னது…

தொப்புளில் பம்பரம் விட்ட நடிகர் பாமகவை குறை கூறியுள்ளான். இந்த நடிகருக்கு தொகுதி மக்கள் யாராவது ஆங்கிலத்தில் மனு கொடுத்தால் படிக்க தெரியுமா ? இல்லை அர்த்தம் தான் சொல்ல தெரியுமா?. இட ஒதுக்கீடு என்றால் என்னவென்று தெரியுமா ? தியாகம் என்றால் என்னவென்று தெரியுமா ? மக்கள் பிரச்சினைக்காகவும், உரிமைக்காகவும் தெருவிலும், அரசு அலுவலகங்கள் முன் போராட தெரியுமா? மக்கள் முன்னேற்றதிர்க்கு நல்ல அறிவுரைதான் சொல்ல தெரியுமா. இந்த கூத்தாடிக்கு அரசியல் சாசனம் பற்றித்தான் தெரியுமா? சமுதாயம் என்றால் என்னவென்று தெரியுமா? "சின்ன கவுண்டர்" என்ற சமுதாயம் சார்ந்த படத்தில் "வக்கிரமாக" பெண்ணின் தொப்புளில் பம்பரம் விட்ட நடிகரை தமிழ்நாட்டு பெண்கள் புறக்கணிக்க வேண்டும். குறிப்பாக "கவுண்டர்" என்ற சாதி அடைமொழி கொண்ட கொங்கு வெள்ளாளர் மற்றும் வன்னியர்கள் அனைவரும் புறக்கணிக்க வேண்டும். இந்த காட்சியை ஆபாச படத்தில் காட்ட வேண்டியதுதானே?. அப்போ தமிழ் பண்பாட்டை கெடுப்பதுதானே இந்த தெலுங்கனின் குறிக்கோள். விருத்தாசலம் தொகுதியில் மக்களுக்கு எதுவும் செய்யாத இவன் ரிஷிவந்தியம் தொகுதியில் நிற்கிறான். எனவே இந்த தொகுதி மக்கள் தகுந்த பாடம் புகட்ட வேண்டும். விருத்தாசலம் தொகுதி மக்களை கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும். இந்த தேர்தலில் 2.5 கோடி வன்னியர்களும் டாக்டர் அய்யாவின் கரத்தை வலுப்படுத்த வேண்டும்.