சோழிங்கநல்லூர்:
சோழிங்கநல்லூர் தொகுதியில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் வேட்பாளர் பாலாஜியை ஆதரித்து, பா.ம.க., சார்பில், சோழிங்கநல்லூரில் பொதுக் கூட்டம் நடந்தது.
இதில் பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் பேசுகையில்,
""பாட்டாளி மக்கள் கட்சியும், விடுதலை சிறுத்தைகள் கட்சியும் இணைந்து செயல்பட வேண்டும் என்பது என்னுடைய இருபது ஆண்டு கால கனவு. அது இன்று நிறைவேறியுள்ளது.ஒன்று சேர்ந்துள்ள எங்களை இனி யாராலும் பிரிக்க முடியாது. எங்கள் கூட்டணி சமுதாய நல்லிணக்க கூட்டணி. வரும் தேர்தலில் எங்களது கூட்டணி அதிக ஓட்டு எண்ணிக்கையில் வெற்றி பெறுவது நிச்சயம்,'' என்றார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக