காரிமங்கலம்:
""கடந்த ஐந்தாண்டு கால தி.மு.க., ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள், மக்கள் மத்தியில் வரவேற்பு பெற்றுள்ளது,'' என, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் பேசினார்.
பாலக்கோடு தொகுதி பா.ம.க., வேட்பாளர் பாடி செல்வத்தை ஆதரித்து, காரிமங்கலத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் பேசியது:
தி.மு.க., ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள், மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டப் பணிகள் சிறப்பாக நடந்து வருகிறது. இத்திட்டப் பணிகளை பார்வையிட மூன்று முறை துணை முதல்வர் ஸ்டாலின் வந்து சென்றுள்ளார்.கடந்த தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தும், தி.மு.க., அரசில் நிறைவேற்றப்பட்டுள்ளன.
தற்போது கொடுத்துள்ள வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும். தர்மபுரியில் மருத்துவக் கல்லூரியை பா.ம.க., முயன்று பெற்று தந்தது. மத்திய அமைச்சராக அன்புமணி இருந்த போது கொண்டு வரப்பட்ட, "108' ஆம்புலன்ஸ் திட்டம் நல்ல முறையில் செயல்படுத்தப்படுகிறது. கிராமப்புற சுகாதார திட்டத்துக்கு, 5,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கிராமப் பகுதியில் கூட ஆரம்ப சுகாதார நிலையங்களில் மகப்பேறு திட்டங்கள் மூலம் சிறப்பாக செயல்படுகிறது.
அ.தி.மு.க.,வின் பத்து ஆண்டு கால ஆட்சியில், 100 கோடி ரூபாய் செலவில் வளர்ப்பு மகன் திருமணம், கும்பகோணம் மகாமகத்தில் குளிக்கும் போது அப்பாவிகள் இறந்தது தான் அ.தி.மு.க., ஆட்சியில் செய்த சாதனை. தமிழக தேர்தலில் தி.மு.க., கூட்டணி வெற்றி பெறும்.இவ்வாறு ராமதாஸ் பேசினார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக