
செஞ்சி:
மயிலம் தொகுதி பா.ம.க.வேட்பாளர் பிரகாஷ் வல்லம் ஒன்றியத்தில் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது வேட்பாளர் பிரகாசுக்கு ஆதரவாக கண்ணன் எம்.எல்.ஏ. போந்தை, வீரணாமூர், வேம்பாக்கம், கடுகப்பட்டு, நிர்பெருத்தகரம், ஏதாநெமிலி, மேல் அத்திப்பாக்கம் எடமலை உள்ளிட்ட கிராமங்களில் வாக்கு சேகரித்தார்.
முன்னதாக வேட்பாளர் பிரகாஷ் கடம்பூர், களையூர், வடபுத்தூர், கொரவனந்தல், நெகனூர், அரியூர், விற்பட்டு, அருகாவூர், பணப்பாக்கம் உள்ளிட்ட கிராமங்களில் வாக்கு சேகரித்தார். அவருடன் தி.மு.க. ஒன்றிய செயலாளர் அண்ணாதுரை, பொருளாளர் இளம்வழுதி, துரை திருநாவுக்கரசு, கவுன்சிலர்கள் துரை, பெருமாள், பா.ம.க.மாவட்ட செயலாளர் மணிமாறன், துணை செயலாளர் சேட்டு என்ற ரங்கநாதன், ஒன்றிய செயலாளர் வேல்முருகன், முன்னாள் ஒன்றிய செயலாளர் பெருமாள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக