உளுந்தூர்பேட்டை:
உளுந்தூர்பேட்டை சட்டமன்ற தொகுதியில் விடுதலைச் சிறுத்தைகள் வேட்பாளர் முகமதுயூசுபுக்கு வாக்குசேகரிப்பு பிரச்சாரக் கூட்டம் மடப்பட்டில் நடை பெற்றது. உளுந்தூர்பேட்டை ஒன்றிய தி.மு.க. செயலாளர் கே.திருநாவுக்கரசு எம்எல்ஏ தலைமை வகித்தார். திருநாவலூர் ஒன்றிய தி.மு.க. செயலாளர் ஜி.ஆர்.வசந்தவேல் வரவேற்றார். திருவெண்ணைநல்லூர் ஒன்றிய தி.மு.க. செயலாளர் துரைராஜ், பா.ம.க. மாநில துணைச் செயலாளர் அன்பழகன், மாவட்ட செயலாளர் பாண்டியன்,
முன்னாள் மாவட்ட செயலாளர் வ.ச.சுரேசுகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பா.ம.க. நிறுவனத் தலைவர் டாக்டர் ராமதாஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளன் ஆகியோர் கலந்துகொண்டு முகமதுயூசுபை ஆதரித்து வாக்குசேகரித்து பேசினர்.
அப்போது பா.ம.க. நிறுவனத் தலைவர் டாக்டர் ராமதாஸ் பேசியது
"திருமாவளவன் கையும், ராமதாஸ் கையும் சேர்ந்துவிட்டது. இதை யாராலும் பிரிக்க முடியாது. இணைந்த கரங்களை பிரிப்பதென்பது நடக்காத ஒன்று. இந்தத்தொகுதியில் உள்ள இளஞ்சிங்கங்களும், இளஞ்சிறுத்தைகளும் தோளோடு, தோள் சேர்ந்து பெரியவர்களின் கால்களில் விழுந்தும் வாக்குசேகரிக்கவேண்டும், இந்த தொகுதியில் தி.மு.க., காங்கிரஸ், பா.ம.க., விடுதலைச் சிறுத்தைகள் என நமது கூட்டணி கட்சிகள் பலம் வாய்ந்த தொகுதியில் அதிமுகவை பின்னுக்கு தள்ளிவிட்டு வெற்றிவாகை சூடவேண்டும்’’ என்று கூறினார்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக