சட்டப்பேரவை பேரவைத் தலைவர் டி. ஜெயகுமாருக்கு பாமக குழுத் தலைவர் ஜெ.குரு வாழ்த்து

  
          14-வது சட்டப் பேரவையின் புதிய தலைவராக அதிமுகவைச் சேர்ந்த டி.ஜெயகுமார் ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டார். இதற்கான அறிவிப்பை தாற்காலிக பேரவைத் தலைவராக இருந்த செ.கு. தமிழரசன் வெளியிட்டார். இதேபோன்று, பேரவையின் துணைத் தலைவராக ப. தனபாலும் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

          பேரவைத் தலைவர், துணைத் தலைவருக்கு பேரவையில் உள்ள கட்சித் தலைவர்கள் பாராட்டுரை வழங்கினர். அவை முன்னவர் பன்னீர்செல்வம் முதலில் பாராட்டிப் பேசினார். இதைத் தொடர்ந்து, எதிர்க்கட்சித் தலைவர் விஜயகாந்த், பேரவை திமுக குழுத் தலைவர் மு.க.ஸ்டாலின், மார்க்சிஸ்ட் குழுத் தலைவர் ஏ.சௌந்தரராஜன், இந்திய கம்யூனிஸ்ட் பேரவைக் குழுத் தலைவர் ஆறுமுகம், பாமக குழுத் தலைவர் குரு, ஜவாஹிருல்லா (மனித நேய மக்கள் கட்சி), கிருஷ்ணசாமி (புதிய தமிழகம்), கதிரவன் (பார்வர்டு பிளாக்), சரத்குமார் (சமத்துவ மக்கள் கட்சி) ஆகியோர் பாராட்டுரை வழங்கினர்.

           அவர்களைத் தொடர்ந்து, முதல்வர் ஜெயலலிதா இருவரையும் பாராட்டிப் பேசினார். இந்த பாராட்டுகளை ஏற்றுக் கொண்ட இருவரும் ஏற்புரை நிகழ்த்தினர். முதலில் பேரவை துணைத் தலைவர் தனபாலும், அடுத்ததாக பேரவைத் தலைவர் டி.ஜெயகுமாரும் ஏற்புரை ஆற்றினர்.

0 கருத்துகள்: