அதிக கல்விக் கட்டணம் வசூலிக்கப்படுவதை தமிழக அரசு தடுக்கக் கோரி தமிழக மாணவர் சங்கம் சார்பில் ஜூன் 15-ம் தேதி சென்னையில் தொடர் முழக்கப் போராட்டம் நடத்தப்படும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கை:
தனியார் பள்ளிகள் அதிக கட்டணம் வசூலிப்பதைத் தடுக்கக்கோரி உயர்நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகளை பாமக நடத்தியிருக்கிறது. இதனால் கல்விக் கட்டண நிர்ணயக் குழு அமைக்கப்பட்டு, கல்வி கட்டணம் நிர்ணயிக்கப்பட்ட போதிலும், அதிக கட்டணம் வசூலிப்பது மிகுந்த வருத்தமும், வேதனையும் அளிக்கிறது.
கட்டண நிர்ணயக் குழுவின் மூலம் தமிழக அரசு நியாயமான கட்டணத்தை நிர்ணயிக்க வேண்டும். அதை அனைத்துப் பள்ளிகளும் செயல்படுத்துவதை உறுதி செய்ய வேண்டும்.
தமிழக அரசு அனைத்து வசதிகளையும் பயன்படுத்தி அதிக கட்டணம் வசூலிப்பதை தடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி தமிழக மாணவர் சங்கத்தின் சார்பில் வரும் 15-ம் தேதி காலை சென்னை சென்ட்ரலில் உள்ள மெம்மோரியல் ஹால் அருகில் தொடர் முழக்கப் போராட்டம் நடத்தப்படும் என்று அவர் கூறியுள்ளார்.
போராட்டம்:
தமிழக அரசு அனைத்து வசதிகளையும் பயன்படுத்தி அதிக கட்டணம் வசூலிப்பதை தடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி தமிழக மாணவர் சங்கத்தின் சார்பில் வரும் 15-ம் தேதி காலை சென்னை சென்ட்ரலில் உள்ள மெம்மோரியல் ஹால் அருகில் தொடர் முழக்கப் போராட்டம் நடத்தப்படும் என்று அவர் கூறியுள்ளார்.
1 கருத்துகள்:
அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட அதிகம் வசூலிக்கும் தனியார் பள்ளிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்வதுடன், கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். மறைமுக கட்டணத்தையும் தவிர்க்க வேண்டும். பெரும்பாலான பள்ளிகளில் ரசீது தருவதில்லை. இதையெல்லாம் ஒடுக்க, இனிமேல் கட்டணத்தை டி.டி அல்லது காசோலை மூலம் மட்டுமே செலுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும். தனிப்படை அமைத்து இதை கண்காணிக்க வேண்டும். அதுபோல் குறிப்பிட்ட வயது வந்தவர்களுக்கு மட்டும், குறிப்பிட்ட நேரங்களில் (காலை அல்லது இரவு மட்டும்) , அதுவும் ஊருக்கு ஒதுக்கு புறமாக உள்ள இடத்தில் டாஸ்மாக் கடைகள் இருக்க நடவடிக்கை தேவை. இதை படிப்படியாக குறைத்து மதுவை அறவே ஒழிக்கணும்.
கருத்துரையிடுக