தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் பர்னாலா ஆற்றிய உரையில் வரவேற்கப்பட வேண்டிய சில திட்டங்கள் இடம்பெற்றிருப்பது மகிழ்ச்சி அளித்தாலும், வளர்ச்சிக்கான திட்டங்கள் எதுவும் அறிவிக்கப்படாதது வருத்தமளிப்பதாக பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
இது குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
"கேபிள் தொலைக்காட்சி சேவை அரசுடைமையாக்கப்படுவது, தமிழக நதிகள் இணைப்பு, பிளாஸ்டிக் பைகளுக்கு தடை ஆகிய அறிவிப்புகள் வரவேற்கத்தக்கது.
புதிய தலைமைச் செயலகக் கட்டுமானப் பணிகள் நிறுத்தி வைப்பு, மெட்ரோ ரயில் திட்டத்தில் கவனம் செலுத்தாதது மற்றும் தமிழகத்தின் வளர்ச்சி, வேலைவாய்ப்பு ஆகியவற்றை அதிகரிக்க திட்டங்கள் எதுவும் ஆளுநர் உரையில் அறிவிக்கப்படாதது ஏமாற்றம் அளிக்கிறது’’என்று தெரிவித்துள்ளார். மாணவர்களுக்கு இலவச லேப்டாப், மகளிருக்கு இலவச மிக்சி, கிரைண்டர், மின்விசிறி ஆகியவை வழங்கப்படும் என்ற அறிவிப்புகள் வரவேற்கப்பட வேண்டியவைதான்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக