கல்விக் கட்டணக் கொள்ளைக்கு எதிரான போராட்டம் ஜூன் 17ஆம் தேதி நடைபெறுகிறது என்றும், இந்த போராட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளதாகவும், தமிழக மாணவர் சங்கம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக தமிழக மாணவர் சங்க செய்திக் குறிப்பில்,
கல்விக் கட்டணக் கொள்ளைக்கு எதிரான தமிமிழக மாணவர் சங்கத்தின் போராட்டம் வரும் ஜூன் 17ஆம் தேதி வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது. அன்று காலை 11 மணிக்கு சென்னை அரசு பொது மருத்துவமனை அருகில் உள்ள நினைவரங்கம் அருகில் இந்தப் போராட்டம் நடைபெறும். இப்போராட்டத்தில் தமிழக மாணவர் சங்க நிறுவனர் டாக்டர் ராமதாஸ் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொள்வார்கள் என்று கூறப்பட்டுள்ளது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக