சமச்சீர் கல்வியை நடப்பு கல்வியாண்டிலேயே நடைமுறைபடுத்த வேண்டும் இந்திய மாணவர் சங்கம் வலியுறுத்துகிறது.
இது குறித்து இந்திய மாணவர் சங்கம் தமிழ்நாடு மாநிலத்தலைவர் கே.எஸ்.கனகராஜ் மற்றும் மாநிலச் செயலாளர் ஜோ.ராஜ்மோகன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
"சமச்சீர் கல்விக்கான பொதுப் பாடத்திட்டத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட பாடநூல்களை நடப்பு கல்வியாண்டில் நடைமுறைபடுத்த வேண்டுமெனவும். இந்தாண்டு சமச்சீர்கல்வியை ரத்து செய்யும்வகையில் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டமசோதாவிற்கு இடைக்கால தடைவிதித்தும் சென்னைஉயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திடமுயற்சிக்கும் தமிழக அரசின் நடவடிக்கைக்கு இந்திய மாணவர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.
சமச்சீர் கல்விக்கான பாடத்திட்டம் தரம் குறைந்துள்ளது மாணவர்களின் திறன்களை வளர்க்கும் விதத்தில் பாடத்திட்டமும்,பாடநூல்களும் இல்லை என்று கூறி இந்தாண்டு பழைய பாடத்திட்டமே பின்பற்றப்படும் என தமிழக அரசு அறிவித்தது. இதற்கான சட்ட மசோதவும் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில் மாணவர்கள், பெற்றோர்கள், கல்வியாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததோடு கடும்போராட்டத்தையும் நடத்தினர். இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட பொதுநலவழக்கின் தீர்ப்பு மக்களின் எதிர்பார்ப்பை, விருப்பத்தை நிறைவேற்றும் தீர்ப்பாகஅமைந்துள்ளது.
சமச்சீர் கல்விக்கான பாடத்திட்டத்தில் எந்த அடிப்படையில் தரம் குறைந்துள்ளது என்பதை அரசு இதுவரை தெளிவுபடுத்தாத நிலையில் சமச்சீர்கல்விக்கான பாடநூல்களில் சர்ச்சைக்குரிய பகுதிகளை நீக்கிட உயர்நீதிமன்றம் தடைவிதிக்கவில்லை. ஆகவே தமிழக அரசு சமச்சீர் கல்விக்கானபொதுப்பாடத்திட்டதை 1 முதல் 10ம் வகுப்பு வரை நடைமுறைப் படுத்திக்கொண்டே பாடநூல்களில்உள்ள தவறுகளை,குறைகளை களைந்திட வேண்டுமென இந்திய மாணவர் சங்கம்வலியுறுத்துகிறது.
மேலும் ஜீன் 15ல் திட்டமிட்டபடி பள்ளிகளை திறந்திட வேண்டுமெனவும் மாணவர்களின் நலனை கருதாமல் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு என்ற அரசின் முடிவுகோடிக்கணக்கான மாணவர்கள் ,பெற்றோர்களை பெரும் குழப்பத்திற்கு ஆளாக்கிடும், எனவே அரசு உயர்நீதிமன்ற தீர்ப்பை நடைமுறைப் படுத்துவதோடு படிப்படியாக முழுமையான சமச்சீர்கல்வியை நடைமுறைப் படுத்திட அரசு முயற்சிக்க வேண்டும் மேலும் தமிழ்நாட்டில் தனியார் பள்ளிகள் நீதிமன்ற உத்தரவையும் அரசின் விதியையும் மீறி பல்லாயிரக்கணக்கில் கட்டணங்களை வசூலிப்பதால் பெற்றோர்களும் மாணவர்களும் செய்வதறியாதுபுலம்பி வருகின்றனர்.
தனியார் பள்ளிகளின் கட்டணக்கொள்ளையை சமாளிக்க முடியாமல் மனமுடைந்து கோவையை சேர்ந்த உண்ணிகிருஷ்னன் தனது மகன் மற்றும் மகளுக்கு கட்டணம் செலுத்த முடியாததால் தற்கொலை செய்து கொண்டது பெரும் அதிர்ச்சியளிக்கிறது. ஏற்கனவே கோவை பெர்க்ஸ் பள்ளி 1ம்வகுப்பு மாணவனுக்கு கட்டணம் செலுத்த முடியாததால் அவரது தாய் தற்கொலை செய்துகொண்டார்என்பது குறிப்பிடதக்கது. தனியார் பள்ளிகளின் கட்டணக்கொள்ளை மிகப்பெரிய சமூககொடுமையாகமாறிவிட்டது. தடுக்க வேண்டிய தமிழக அரசு வேடிக்கை பார்ப்பது வேதனைக்குறியது. ஆகவே தனியார்பள்ளிகளின் கட்டணக் கொள்ளையை தடுத்திட உரிய நடவடிக்கை எடுக்கவேண்டுமென தமிழக அரசை இந்திய மாணவர் சங்கம் வலியுறுத்துகிறது’’ என்று தெரிவித்துள்ளனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக