அணைக்கட்டு பகுதியில் அரசுக் கல்லூரி: அணைக்கட்டு பாமக உறுப்பினர் எம்.கலையரசு கோரிக்கை


           ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின்  மீது அணைக்கட்டு  பாமக  உறுப்பினர் எம்.கலையரசு  பேசினார்.  
 
 அணைக்கட்டு  பாமக  உறுப்பினர் எம்.கலையரசு பேசியது 
 
              பசுமை வீடு திட்டத்தை அரசு அறிவித்துள்ளது. இந்த வீட்டை கழிப்பறையுடன் கட்ட வேண்டும். இந்த திட்டத்தின் கீழ் எவ்வளவு வீடுகள்  கட்டப்படும், எவ்வளவு காலத்திற்குள் கட்டி முடிக்கப்படும் என்பதை தமிழக அரசு தெளிவுபடுத்த வேண்டும். புதிய காப்பீடு திட்டத்தை செயல்படுத்தும் வரை, நோயாளிகள் பயன் பெரும் வகையில் ஏற்கனவே உள்ள கலைஞர்  காப்பீடு திட்டத்தை செயல்படுத்த வேண்டும். அணைக்கட்டு பகுதியில் அரசுக் கல்லூரி ஒன்றை அமைக்க வேண்டும். அணைக்கட்டு & வேலூர் பகுதியல் போக்குவரத்து நெரிசலை தீர்க்க சுற்று சாலை அமைக்கவேண்டும். ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தை அணைக்கட்டு பகுதிக்கும் விரிவுபடுத்த வேண்டும் என்று பேசினார்.

        

0 கருத்துகள்: