பா.ம.க. தலைமை வெளியிட்டுள்ள அறிக்கை: முன்னாள் எம்.எல்.ஏ.க்கள், வை.காவேரி மற்றும் மேச்சேரி மே.ப.காமராஜ் கட்சியில் இருந்து நீக்கம்

 பா.ம.க. தலைமை வெளியிட்டுள்ள அறிக்கையில்,


            ‘’பா.ம.க. கட்சியின் சேலம் மாவட்டத்தை சேர்ந்த எடப்பாடி தொகுதி சட்டமன்ற முன்னாள் உறுப்பினரும், மாவட்ட செயலாளருமான வை.காவேரி, சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் மேச்சேரி மே.ப.காமராஜ் ஆகியோர் கட்சி கட்டுப்பாடை மீறி கட்சிக்கு அவப்பெயரும், களங்கமும் உண்டாக்கும் வகையில் செயல்பட்டுவருவதால், இவர்களை பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், முன்னாள் மத்திய மந்திரி டாக்டர் அன்புமணி ராமதாஸ் ஆகியோரின் ஆலோசனைப்படி கட்சியின் அடிப்படை உறுப்பினர் முதலான அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்படுகிறார்கள். பா.ம.க.வினர் யாரும் இவர்களோடு எந்த வித தொடர்பும் வைத்துக்கொள்ள வேண்டாம்’’ என்று கூறப்பட்டுள்ளது.
 

0 கருத்துகள்: