சமச்சீர் கல்வி நிறுத்தி வைக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து சென்னையில் பாமக சார்பில் தொடர் முழக்கப் போராட்டம், நடைபெற்றது.
இதில் கலந்துகொண்டு பேசிய பாமக நிறுவனர் ராமதாஸ்
மதுக்கடைகளை தானே ஏற்று நடத்தும் அரசு, தனியார் கல்வி நிறுவனங்களை ஏற்று நடத்த ஏன் தயக்கம் காட்டுகிறது. தமிழகத்தில் அதிகரித்துவிட்ட தனியார் கல்வி நிறுவனங்களுக்கு ஆதரவாக அரசு செயல்படுவது. இதனால் அரசு பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருகிறது. மக்களைப் பற்றி கவலைப்படாமல் சமச்சீர் கல்வி பற்றி ஆராய தமிழக அரசு நியமித்துள்ள வல்லுநர் குழு ஒரு கண்துடைப்பு நாடகம் சமச்சீர் கல்வியை அமல்படுத்தச் செய்வதில் எந்தக் கட்சியும் தீவிரமாக செயல்படவில்லை என்றார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக