புதுச்சேரியில் பாட்டாளி மக்கள் கட்சியின் 22ம் ஆண்டு துவக்க விழா: மாநில செயலாளர் அனந்தராமன் தலைமை தாங்கினார்

புதுச்சேரி : 

           பாட்டாளி மக்கள் கட்சியின் 22ம் ஆண்டு துவக்க விழா ப்ளிஸ் இன் ஓட்டலில் நேற்று நடந்தது. மாநில செயலாளர் அனந்தராமன் தலைமை தாங்கினார். கட்சி ஆலோசகர் ராமகிருஷ்ணன், நிர்வாகிகள் சுப்ரமணியன், மதியழகன் முன்னிலை வகித்தனர். 

விழாவில், செயலாளர் அனந்தராமன் பேசியது:

       இந்த கூட்டத்துக்கு பல தொகுதிகளின் நிர்வாகிகள் வராதது வேதனை அளிக்கிறது. தேர்தலில் வெற்றி பெற்றால்தான் கட்சி என்பது கிடையாது. எந்த நேரத்திலும் மக்கள் பணியாற்ற வேண்டும். துடிப்புடன் பணியாற்றும் புதிய நிர்வாகிகள் விரைவில் நியமிக்கப்பட உள்ளனர். கட்சிக்காக வேலை செய்பவர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படும்.

           கடந்த கால ஆட்சியாளர்கள் மீது இருந்த வெறுப்பு தேர்தல் தோல்விக்கு ஒரு காரணமாகும். பெரும்பான்மை சமுதாயத்தை சேர்ந்தவரை முதல்வர் பதவியில் இருந்து நீக்கியதால் மக்கள் ஆதங்கத்தில் ஓட்டளித்தனர். இதனால், பா.ம.க., வுக்கு பின்னடைவு ஏற்பட்டது. ஒவ்வொரு தொகுதியிலும் 10 ஆயிரம் ஓட்டுக்களை பா.ம.க., பெற்று தந்துள்ளது. உள்ளாட்சித் தேர்தலை விரைவில் நடத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மாநில தேர்தல் ஆணையரை உடனடியாக நியமிக்க வேண்டும்.

             தேர்தலில் நிற்க விரும்புபவர்கள் வரும் 25ம் தேதியில் இருந்து விருப்ப மனு தரலாம். இவ்வாறு அனந்தராமன் பேசினார். விழாவில், துணை செயலாளர்கள் செல்வராஜ், ஜெயபால், ஞானசேகரன், முகமது யூசுப், தொண்டரணி அமைப்பாளர் சதீஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

இளைஞரணி: 

          பா.ம.க., இளைஞரணி சார்பில் முத்தியால்பேட்டையில் துவக்க விழா நடந்தது. இளைஞரணி தலைவர் அறிவழகன் வரவேற்றார். செயலாளர் அனந்தராமன், கொடியேற்றினார்.

1 கருத்துகள்:

dakaraidakila சொன்னது…

திமுக + காங்கிரஸ் + பாமக + விசி கூட்டணி வெற்றி கூட்டணி, சரித்திர கூட்டணி. இது உள்ளாட்சி தேர்தலிலும் இருந்ததால் தான் சவால்களை வெற்றி பெற செய்ய முடியும். மக்கள் நலனுக்காகவே பாமக தொடர்ந்து போராடுகிறது. திமுகவின் பொற்கால ஆட்சி, பாமகவின் மக்கள் நலனுக்காகவும் , உரிமைக்காகவும் , அடிப்படை வசதிகளை நிறைவேற்ற கோரியும் செய்த போராட்டங்கள் சரித்திர கல்வெட்டுகள். டாக்டர் கலைஞர் + டாக்டர் அய்யா எப்போதும் இரட்டை குழல் துப்பாக்கி போல் செயல்பட்டு மீண்டும் ஆட்சியை பிடிக்கணும். அப்போதுதான் ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வுரிமை ஓங்கும். அரசியல் தியாகிகளான இந்த இரண்டு டாக்டரும் தான் தமிழ்நாட்டின் பிற்பட்ட , தாழ்த்தப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களின் இரு கண்கள். மக்கள் மனதில் நீங்க இடம் பெற்றுள்ள இந்த டாக்டர்கள் பல்லாண்டு வாழ்க.