அணைக்கட்டு:
ஆரணியை அடுத்த அம்மாபாளையம் கிராமத்தைச் சேர்ந்த ம.கலையரசு, சட்டப்பேரவைத் தேர்தலில் அணைக்கட்டு தொகுதியில் பாமக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதையொட்டி, கலையரசுவின் நண்பர்கள் கண்ணமங்கலத்தில் ஞாயிற்றுக்கிழமை பாராட்டு விழாவை நடத்தினர். இதில் திரைப்பட இயக்குநர் தங்கர்பச்சான் சிறப்பு விருந்தினராக பங்கேற்று சிறப்புரையாற்றினார்.
விழாவில் கண்ணமங்கலம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் படித்து பொதுத்தேர்வுகளில் சிறப்பிடம் பெற்ற எஸ்.நித்யா, எஸ்.வினிதா ஆகியோருக்கு தலா ரூ.5 ஆயிரம் பரிசை அணைக்கட்டு எம்எல்ஏ கலையரசு வழங்கினார். முன்னாள் மத்திய இணை அமைச்சர் அரங்க.வேலு, மேற்கு ஆரணி ஒன்றியக் குழு துணைத் தலைவர் வெள்ளை கணேசன், மாவட்ட கவுன்சிலர் ஆ.வேலாயுதம், பாமக முன்னாள் மாவட்டச் செயலர் சி.கைலாசம், பேராசிரியர் கு.சிவா, எல்ஐசி முகவர் தரணி, பேரூராட்சித் துணைத் தலைவர் கோவர்தனன், காட்டுகாநல்லூர் ஊராட்சித் தலைவர் ஜெயக்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக