காஞ்சிபுரம் மேற்கு மற்றும் தெற்கு மாவட்ட பாமக பொதுக்குழுக் கூட்டம்: பாமக நிறுவனர் ராமதாஸ் பங்கேற்பு

மாநில துணைப் பொதுச் செயலர் பொன்.கங்காதரன் தலைமை தாங்கினார். மாநில தலைவர் ஜி.கே.மணி, முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே.மூர்த்தி

          காஞ்சிபுரம் மேற்கு மற்றும் தெற்கு மாவட்ட பாமக பொதுக்குழுக் கூட்டம் 21.07.2011 அன்று நடைபெற்றது.

இக் கூட்டத்தில் பங்கேற்று பேசிய பாமக நிறுவனர் ராமதாஸ்,




          தமிழ்நாட்டில் நடப்பது அரசியலே அல்ல, அரிசியல். ரூபாய்கு 3 படி அரிசி, ரூபாய்க்கு ஒரு படி அரிசி, ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி, இப்போது 20 கிலோ இலவச அரிசி என்று அரசியல் இப்போது அரிசியலாக மாறியுள்ளது. இலவச மிக்ஸி கிரைண்டர், டி.வி. கொடுப்பதில் எங்களுக்கு உடன்பாடு இல்லை. கல்வியும், மருத்துவமும் தவிர வேறு எதையும் இலவசமாக கொடுக்கக்கூடாது. கல்வியை இலவசமாக கொடுத்து, வேலைவாய்ப்பை உருவாக்கினால், இலவசமாக கொடுக்கும் பொருள்களை அவர்களே வாங்கிக் கொள்வார்கள்.

             சங்க காலத்தில் தமிழர்கள் வீரத்துடன் போருக்கு சென்றனர். தற்போது தமிழர்கள் பாருக்கு செல்கின்றனர். கல்விக் கூடங்களை அரசு நடத்த வேண்டும். ஆனால் அது தனியாரிடம் விடப்படுகிறது. ஆனால் டாஸ்மாக் மதுக்கடைகளை அரசு நடத்துகிறது. இதனால்தான் போருக்கு சென்ற தமிழன் பாருக்கு செல்லும் நிலை உருவாகியுள்ளது. விவசாயிகள் பலர் நகப்புறங்களை நோக்கி நகரத் தொடங்கியுள்ளனர்.

            விவசாய நிலங்கள் ரியல் எஸ்டேட்டுகளாக மாற்றப்படுகின்றன. எந்தக் காரணத்துக்காகவும் விவசாய நிலங்களை எடுக்கக் கூடாது என்று நாங்கள் விவசாயிகளுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறோம். தமிழகத்தில் பாமக தோல்வி அடைந்ததற்கு பலர் பல்வேறு காரணங்களை கூறினர். இளைஞர்கள் நம் கட்சியில் இருந்திருந்தால் இந்தத் தோல்வி நமக்கு ஏற்பட்டிருக்காது. உடனடியாக அவர்களை கட்சியில் சேர்க்கும் முயற்சியில் இறங்குங்கள் என்றார்.


1 கருத்துகள்:

dakaraidakila சொன்னது…

தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக வேண்டுமானால் பாமக ஆட்சிக்கு வரவேண்டும். மது ஒழிப்பு, தனியார் துறையிலும் இட ஒதுக்கீடு, வேளாண்மை புரட்சி, அனைத்து பள்ளிக்கூடமும் அரசுடமை ஆக்குவது, அனைவருக்கும் அனைத்தும் கிடைப்பது, பெண்கள் முன்னேற்றம், வரதட்சணை ஒழிப்பு & சமஉரிமை, போதை பொருள் ஒழிப்பு, லாட்டரி & கிரிக்கெட் சூதாட்ட ஒழிப்பு, வன்முறை& தீவிரவாதம் ஒழிப்பு, கட்டாய கல்வி. இவற்றை பாமக மட்டுமே நிறைவேற்ற முடியும். வேறு எந்த கட்சியாலும் நிறைவேற்ற முடியாது. ஏன் அவர்களால் பேசக்கூட முடியாது. அவர்கள் வெறும் கவர்ச்சி திட்டங்கள் தான் செய்ய முடியும். முன்னோடி & வளர்ச்சி திட்டங்கள் இருக்காது. தற்போது ஒரு அரசு இருக்கிறதா என்று மக்கள் குறிப்பாக மாணவர்கள், பெற்றோர்கள் எண்ண தோன்றுகிறது. எனவே ஒரு 6 மாதம் பாமகவிடம் ஆட்சியை ஒப்படைப்பது நல்லது. அப்போது தான் மக்கள் நல சரித்திர ஆட்சி அமையும். பாமகவின் ஆற்றல் உலகிற்கு தெரியும்.