கீழ்கோத்தகிரி ஒன்றிய பா.ம.க செயற்குழு கூட்டம்: சமச்சீர் கல்வி உச்சநீதிமன்ற உத்தரவை வரவேற்று பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கப்பட்டது

கோத்தகிரி:

           சமச்சீர் கல்வி குறித்த உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவினை வரவேற்று கீழ்கோத்தகிரி ஒன்றிய பா.ம.க சார்பில் இனிப்புகள் வழங்கப்பட்டன. 

             கீழ்கோத்தகிரி ஒன்றியத்திற்குட்பட்ட கெரடாமட்டம், எஸ்.கைகாட்டி ஆகிய பகுதிகளுக்கான செயற்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றியச் செயலர் ஆ.ஜெகதீசன் தலைமை தாங்கினார். தலைவர் செந்தில்குமார் முன்னிலை வகித்தார். 

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

                 கோத்தகிரி வருவாய்த்துறையிலுள்ள காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்பிட வேண்டும். எஸ்.கைகாட்டி ராஜ் நகர் பகுதியில் குடிநீர் பிரச்னைக்கு மாவட்ட நிர்வாகம் தீர்வு காண வேண்டும். கக்குளா பகுதியிலுள்ள கிராம நிர்வாக அலுவலகத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விரைவில் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். உச்ச நீதிமன்றம் சமச்சீர் கல்வி குறித்து அளித்துள்ள உத்தரவை வரவேற்று பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.  ஒன்றிய துணைச்செயலர் மதுரைவீரன் நன்றி தெரிவித்தார்.

0 கருத்துகள்: