தமிழ் பாதுகாப்பு இயக்கம் சார்பில் "தமிழ் ஈழமே தீர்வு” என்ற தலைப்பில் கருத்தரங்கம்

 http://www.dailythanthi.com/images/news/20110808/pmk.jpg



சென்னை:
 
         தமிழ் பாதுகாப்பு இயக்கம் சார்பில் “தமிழ் ஈழமே தீர்வு” என்ற தலைப்பில் சென்னை சர்.பிட்டி தியாகராயர் அரங்கில் நேற்று கருத்தரங்கம் நடந்தது. கருத்தரங்கில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ்  சிறப்புரை ஆற்றினார்.

பா.ம.க. தலைவர் டாக்டர் ராமதாஸ் பேசியது 


        இலங்கைப் பிரச்னைக்குத் தமிழீழமே தீர்வாக இருக்க முடியும்.  சூடானில் இருந்து தெற்கு சூடான் ஏன் பிரிந்தது? இந்தோனிஷியாவில் இருந்து கிழக்கு தைமூர் ஏன் பிரிந்தது? என்பதையெல்லாம் தமிழீழக் கோரிக்கைக்கு எதிராகப் பேசுபவர்கள் யோசித்துப் பார்க்க வேண்டும்.  தமிழீழத்திற்கு எதிராகப் பேசுபவர்கள் எங்களோடு விவாதிக்கலாம். எந்த இடத்தில் வந்து விவாதிக்கச் சொன்னாலும்  தயாராக இருக்கிறோம். 
 
              2009-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் முசிறியில் ஜெயலலிதா பேசும்போது, "நாங்கள் வெற்றிபெற்றால், இந்திய ராணுவத்தை அனுப்பி பாகிஸ்தானிடம் இருந்து வங்கதேச நாட்டை பிரித்துக் கொடுத்தது போல, இலங்கைக்கு இந்திய ராணுவத்தை அனுப்பி இலங்கைத் தமிழர்களுக்கு தனி நாடு பெற்றுத் தருவோம்' என்று பேசினார்.  இதன் அடிப்படையில் முதல்வர் ஜெயலலிதா சட்டப்பேரவையில் "இலங்கைத் தமிழர்களுக்கு தமிழீழம் அமைய வேண்டும்' என்று தீர்மானம் நிறைவேற்ற வரவேண்டும்.
           2009-ம் ஆண்டு நடைபெற்ற இலங்கை யுத்தத்தில் தமிழர்கள் கொல்லப்பட்டபோது, தமிழகத்தில் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார் ஒரு தலைவர். அவர் யார் என்று உங்களுக்குத் தெரியும். அவர் பெயரை நான் சொல்லவில்லை. அவரை என்றைக்கும் தமிழன் மன்னிக்க மாட்டான்.இலங்கை இன பிரச்சினைக்கு ஒரே தீர்வு “தமிழ் ஈழம்தான்”. தமிழ் ஈழம் மலரும் வரை குரல் கொடுப்போம் என்றார். 

               கருத்தரங்கில் பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி, முன்னாள் மத்திய மந்திரி ஏ.கே.மூர்த்தி, மாவட்ட செயலாளர்கள் ஜெயராமன், ஜமுனா கேசவன், அம்பத்தூர் கே.என்.சேகர், பி.கே.சேகர், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

2 கருத்துகள்:

dakaraidakila சொன்னது…

மண்ணுலகில் மனித உயிர்களை படைப்பதும், பிறகு பறிப்பதும் கடவுள் செயல். உயிரை பறிக்க கடவுளுக்கு மட்டுமே உரிமை உண்டு. மற்றவர்களுக்கு உரிமை இல்லை. போர் என்றால் ஒரு நாட்டு ராணுவத்துக்கும், இன்னொரு நாட்டு ராணுவத்துக்கும் இடையே நடப்பது. அல்லது ஒரு நாட்டு ராணுவத்துக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே நடப்பது. அல்லது ஒரு ராஜ்யத்தின் மன்னனுக்கும், மற்றொரு ராஜ்யத்தின் மன்னனுக்கும் இடையே நடப்பது. ஆனால் இலங்கையில் நடைபெற்றது போர் இல்லை. போர் என்ற பெயரில், இலங்கை அரசு என்கிற எமன் பல ஆயிரக்கணக்கான அப்பாவி ஈழ தமிழர்கள் உயிரை பறித்துள்ளது. இந்த அப்பாவி ஈழ தமிழர்கள் போர் பயிற்சி பெற்றோ, கையில் ஆயுதமோ வைத்திருக்கவில்லை. எனவே இதற்கு காரணமான அனைத்து குற்றவாளிகளையும் ஐ.நா. சபையில் நிறுத்தி தண்டனை தரவேண்டும். மேலும் இறந்த பல ஆயிரகணக்கான ஆத்மா சாந்தி அடையவும், அதற்கு பரிகாரமாகவும் தனி ஈழம் அமைய வேண்டும். தமிழ்நாட்டில் பாமக ஆட்சி இருந்திருந்தால், கொடுக்க வேண்டிய நெருக்கடியை மத்திய அரசுக்கு கொடுத்து, அப்பாவி ஈழ தமிழர்களை பாதுகாக்க இந்திய ராணுவத்தை இலங்கைக்கு அனுப்பி இருக்கும். எனவே பாமக ஆட்சி வர மக்கள் விரும்புகிறார்கள்.

dakaraidakila சொன்னது…

விபத்துக்கள் அதிகரிப்பது, பெண்கள் தாலி அறுப்பு, குடும்பம் வறுமையை நோக்கி போவது, பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் வீணாக கெட்டு போறது, பாலியல் பலாத்காரம், குற்றவாளிகளை உருவாக்குவது இதற்கெல்லாம் காரணம் குடிபழக்கம் தான். இதனால் பாதிக்கபடுவது பெண்கள். எனவே இவ்வாறு பெண்கள் பாதிக்கபடாமலும், அறிவார்ந்த சமுதாயம் உருவாகவும், திறமை வாய்ந்த வல்லுனர்களை உருவாக்கவும், மது என்ற அரக்கனை தமிழகத்தை விட்டே விரட்டி, உலகத்திற்கே இது ஒரு முன்னோடி மாநிலம் ஆக்கிய பெருமை பாமக மட்டுமே பெற முடியும். தமிழகத்தில் உள்ள ஒட்டு மொத்த பெண்களும் மதுக்கடையை விரும்பவில்லை. இதுதான் உண்மை. எனவே மதுக்கடை வேண்டுமா , வேண்டாமா என்று பெண்கள் மட்டும் வாக்கு அளிக்கும் வகையில் ஒரு எளிய தேர்தல் நடத்த வேண்டும். தமிழகத்தில் மதுக்கடை வேண்டும் என்று சொல்லும் பெண்கள் மட்டும் தங்கள் வாக்காளர் அட்டையை காண்பித்து, தங்கள் வாக்குகளை மனுவாக கிராம நிர்வாக அலுவலரிடம் தரலாம். இதனால் எந்த பெண்ணும் வாக்களிக்க போறதில்லை. அப்படி ஒரு பெண் போனாலும் மற்ற பெண்கள் விட போவதில்லை. இதன் மூலம் சுலபமாக தேர்தல் நடத்தி, ஒரே நாளில் மது கடைகளுக்கு மூடு விழா நடத்திவிடலாம். தமிழகத்தில் உள்ள ஒட்டு மொத்த பெண்களும் விரும்புவது பாமக ஆட்சி. ஏனென்றால் மதுவை ஒழிக்க பாடுபடும் ஒரே கட்சி பாமக.