வேலூர் கிழக்கு மாவட்ட பா.ம.க. பொதுக்குழு கூட்டம்: எம்.எல்.ஏ. கலையரசு வரவேற்புரை


 http://mmimages.mmnews.in/Articles/2011/Aug/d46e35af-6c0a-422c-801f-e1a41b37d7c6_S_secvpf.gif

வேலூர்:

         வேலூர் கிழக்கு மாவட்ட பா.ம.க. பொதுக்குழு கூட்டம் சத்துவாச்சாரியில் உள்ள திருமண மண்டபத்தில் டாக்டர் ராமதாஸ் தலைமையில் நடந்தது.
           லையரசு எம்.எல்.ஏ. வரவேற்று பேசினார்.   மாநில தலைவர் ஜி.கே.மணி, முன்னாள் மத்திய மந்திரி வேலு, என்.டி. சண்முகம், இளவழகன், பொன்னுசாமி, மாவட்ட செயலாளர் வெங்கடேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் பா.ம.க.நிறுவனர்
டாக்டர் ராமதாஸ் பேசியது:-

              மாநில பொதுக்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவை வரவேற்பதற்காக இந்த மாவட்ட கூட்டம் கூட்டப்பட்டுள்ளது. பா.ம.க. திராவிட கட்சிகளுடன் கூட்டணி வைக்கமாட்டோம் என்கிற நிலைபாட்டை நடுநிலையாளர்கள் வரவேற்றுள்ளனர்.  இந்த முடிவில் இருந்து எப்போதும் பின்வாங்க மாட்டோம். கடல், மேகம் அழியாத வரை இந்த முடிவில் உறுதியாக இருப்போம்.   1967-ல் காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்தது. அப்போது காங்கிரஸ் கட்சியை ஒழிக்க வேண்டும் என்பதற்காக திராவிட கட்சிகள் ஏற்படுத்தப்பட்டது.

             அடைந்தால் திராவிட நாடு இல்லாவிட்டால் சுடுகாடு என்ற முழக்கத் துடன் ஆரம்பிக்கப்பட்ட கட்சிகள் தங்களது கொள் கைகளை சுடுகாட்டுக்கு அனுப்பி விட்டது. 48 ஆண்டுகளாக தமிழகத்தை சீரழித்த திராவிட கட்சிகளை ஒழிப்பதே நமது வேலை அ.தி.மு.க.-தி.மு.க.வில் உள்ளவர்கள் பா.ம.க.வில் சேர தயாராக உள்ளனர்.  திராவிட கட்சிகள் இலவசங்களை தந்து பொது மக்களை ஏமாற்றினர், நிலங்கள் மனைகளாக மாற்றப்பட்டது. இதனால் விவசாயம் அழிந்தது. இதற்கெல்லாம் மாறி மாறி ஆட்சி செய்த திராவிட கட்சிகள் தான் காரணம். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இந்த தவறுகளை செய்யமாட்டோம் எந்த விதமான சமரசத்துக்கும் உடன்பட மாட்டோம்.  

              சமச்சீர் கல்விக்காக பா.ம.க. தொடர்ந்து போராடியது. முழுமையாக செயல்படுத்தாததால் அறைகுறையாக உள்ளது. திராவிட கட்சிகள் ஆட்சிக்காலத்தில் கல்வி கொள்ளையர்கள் அதிகரித்து விட்டனர். இந்த கூட்ட தொடரில் தமிழக அரசு மெட்ரிக் பள்ளிகளில் தமிழில் பாடம் நடத்த வேண்டும். தவறினால் பள்ளி அரசுடமையாக்கப்படும் என்ற புதிய சட்டத்தை இயற்ற வேண்டும்.   மெட்ரிக்பள்ளிகள் சமச்சீர் கல்வியை ஏற்காமல் சி.பி.எஸ்.சி. தேர்வு முறை அல்லது வேறு கல்வி முறைக்கு மாறினால் பா.ம.க. சார்பில் தீவிர போராட்டம் நடத்தப்படும். பாலாற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

0 கருத்துகள்: