தர்மபுரி :
தமிழகத்தில் நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி அதிக இடங்களில் வெற்றி பெறும் என பாட்டாளி மக்கள் கடட்சியின் மாநிலத் தலைவர் ஜி.கே. மணி தெரிவித்தார்.
தருமபுரியில் வியாழக்கிழமை நடைபெற்ற கட்சியின் மாவட்ட பொதுக்குழுக் கூட்டத்தில் பாட்டாளி மக்கள் கடட்சியின் மாநிலத் தலைவர் ஜி.கே. மணி பேசியது:
வன்னியர் சமுதாயத்துக்கான இட ஒதுக்கீடு, கட்சியின் நிறுவனர் ராமதாஸ் நடத்திய போராட்டத்தால்தான் கிடைத்தது. எதிர்காலத்தில் கட்சித் தலைமை அறிவிக்கும் போராட்டங்கள் அனைத்தையும் வெற்றி பெறச் செய்யும் வகையில் நாம் உழைக்க வேண்டும். தமிழகத்தில் வரும் அக்டோபர் மாதத்தில் நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி அதிக இடங்களில் வெற்றி பெறுவது உறுதி.
நம்முடைய கடந்த கால போராட்டங்களின் பலனை அறுவடை செய்யும் விதத்தில் தருமபுரி மாவட்டத்தில் அனைத்து இடங்களிலும் பாமக வெற்றி பெற கட்சியினர் கடுமையாக உழைக்க வேண்டும் என்றார் ஜி.கே மணி. இதில் பாமக நிறுவனர் ராமதாஸ், மாநில துணைப் பொதுச் செயலர் அ. சரவணன், வன்னியர் சங்க மாநிலத் துணைத் தலைவர் பாடி செல்வம், சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர்கள் கி. பாரிமோகன், இல. வேலுசாமி, மாவட்டச் செயலாளர்கள் பி.சாந்தமூர்த்தி, ரா. அரசாங்கம், மாட்ட ஊராட்சிக்குழுத் தலைவர் எஸ்.பி. வெங்கடேசுவரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக