
உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும் இன்னமும் சமச்சீர் கல்வியை அமல்படுத்துவதில் காலம் தாழ்த்தும் தமிழக அரசை கண்டிப்பதாக கூறியும், சமச்சீர் கல்வியை இந்த ஆண்டே அமல்படுத்த வேண்டும் என்று கோரியும் பாட்டாளி மக்கள் கட்சியினர் செவ்வாய் கிழமை தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
திருச்சி புத்தூர் நால்ரோடு அருகில் நடைபெற்ற பா.ம.கஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் மாநில துணை பொதுசெயலாளர் உமாநாத் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர்கள் திலீப்குமார், லீமா சிவக்குமார், அரசு ரவி, தங்கராஜ், கிள்ளிவளவன், ஜான் ரெஸ்கின் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து கட்சியின் மாநில துணைத்தலைவர் உ.கண்ணதாசன் சிறப்புரை ஆற்றினார்.
முன்னாள் மாநில துணை பொதுச்செயலாளர்கள் தாமோதரன், முத்து, ஒருங்கிணைந்த மாவட்ட அமைப்பு செயலாளர் கதிர்ராசா, கிழக்கு மாவட்ட அமைப்பு செயலாளர் விஸ்வநாதன், மாநகர் மாவட்ட அமைப்பு செயலாளர் முஸ்தபா, தியாகு, தொழிற்சங்க செயலாளர் கோட்டை குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாநகர் மாவட்ட தலைவர் அப்துல்லாஷா நன்றி கூறினார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக