சிதம்பரம்:
கடலூர் (தெற்கு) மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் சிதம்பரம் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு செவ்வாய்க்கிழமை தொடர் முழக்கப் போராட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
மாவட்டச் செயலர் வழக்கறிஞர் வேணு.புவனேஸ்வரன் தலைமை வகித்தார். நகரச் செயலர் முத்து.குமார் வரவேற்றார். பரங்கிப்பேட்டை ஒன்றியச் செயலர் சௌ.ராஜா முன்னிலை வகித்தார். மாநில ஒழுங்கு நடவடிக்கைக் குழுத் தலைவர் கி.தேவதாஸ்படையாண்டவர், கடலூர் மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் ரா.சிலம்புச்செல்வி, முன்னாள் மாவட்டச் செயலர் உ.கண்ணன், பால்ஸ் ரவிக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மாவட்டத் தலைவர் வ.அன்பழகன் நன்றி கூறினார். தொடர் முழக்கப் போராட்டத்தில் ஈடுபட்ட பாமகவினர் 122 பேரை நகர போலீசார் கைது செய்து பின்னர் விடுவித்தனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக