செங்கொடியின் இறுதிச் சடங்கு நிகழ்ச்சியில் ஜி.கே.மணி பங்கேற்ப்பு

செங்கொடியின் இறுதிச் சடங்கில் பங்கேற்ற தலைவர்கள்.
காஞ்சிபுரம்:
 
           செங்கொடியின் இறுதிச் சடங்கு நிகழ்ச்சி கீழ்கதிர்பூரில் புதன்கிழமை நடைபெற்றது. இந் நிகழ்ச்சியில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், ஆயிரக்கணக்கில் தமிழ் உணர்வாளர்கள், தொண்டர்கள் பங்கேற்றனர். 
 
             காஞ்சிபுரம் அருகே கீழ்கதிர்பூரில் செயல்படும் மக்கள் மன்றத்தைச் சேர்ந்தவர் செங்கொடி. இவர் தூக்கு கயிற்றை எதிர்நோக்கி இருக்கும் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரை காப்பாற்ற வலியுறுத்தி கோஷம் எழுப்பியவாறு காஞ்சிபுரம் வட்டாட்சியர் அலுவலகம் முன் தற்கொலை செய்து கொண்டார். இவரது சடலம் மறு நாள் காலை மருத்துவமனையில் இருந்து ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. சுமார் 7 மணி நேரம் நடைபெற்ற இந்த ஊர்வலத்தில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் தமிழ் உணர்வாளர்கள் திரண்டனர்.
 
ஊர்வலத்துக்கு அனுமதி மறுப்பு...
 
                 இந் நிலையில் அவரின் இறுதிச் சடங்குகளில் பங்கேற்க வந்தவர்கள் செங்கொடி தற்கொலை செய்து கொண்ட காஞ்சிபுரம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கூடினர். அவர்கள் செங்கொடியின் சிலையுடன் இறுதி சடங்கு நடைபெறும் இடத்துக்கு ஊர்வலமாகச் சென்றனர் .அவர்களை அனுமதிக்க மறுத்து போலீஸார் தடுத்தனர். இதனைத் தொடர்ந்து கலைந்து சென்று தனித் தனியாக இறுதிச் சடங்கு நடைபெறும் இடத்துக்குச் சென்றனர்.
 
தலைவர்கள் பங்கேற்பு... 
 
                இறுதிச் சடங்கு நிகழ்ச்சியில் தமிழகம் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கில் தமிழ் உணர்வாளர்கள் திரண்டனர். பாமக மாநில தலைவர் ஜி.கே.மணி, உலகத் தமிழர் பேரமைப்பு தலைவர் பழ.நெடுமாறன், மதிமுக பொதுச் செயலர் வைகோ, விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன்,  பெரியார் திராவிட கழகத் தலைவர் கொளத்தூர் மணி, நாம் தமிழர் இயக்கத் தலைவர் சீமான், அகில இந்திய ஜனநாயக மக்கள் கட்சி ஐசக் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.ருத்ரகுமாரனின்
 
இரங்கல் செய்தி...: 
 
                  இக் கூட்டத்தில் நாடு கடந்த தமிழீழ அரசின் பிரதமர் விஸ்வநாதன் ருத்ரகுமாரனின் இரங்கல் செய்தியை நாடு கடந்த தமிழீழ அரசின் தோழமை மையப் பொறுப்பாளர் பேராசிரியர் சரஸ்வதி வாசித்தார்.இதனைத் தொடர்ந்து தமிழ் உணர்வாளர்கள் முழக்கமிட அனைவரும் மெழுகுவர்த்தி ஏந்தியவாறு கீழ்கதிர்பூரில் உள்ள மக்கள் மன்ற அலுவலகத்தின் அருகிலேயே செங்கொடியின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.
 
 
 
 
 

0 கருத்துகள்: