கோயம்புத்தூரில் சமச்சீர் கல்வியை அமல்படுத்தக் கோரி பாமக ஆர்பாட்டம்


கோவை:
            சமச்சீர் கல்வியை அமல்படுத்த கோரி பாட்டாளி மக்கள் கட்சியினர் செவ்வாய் கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர். கோவை மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி சார்பாக சமச்சீர் கல்வியை நடப்பாண்டிலேயே அமல் படுத்த கோரி கோவை செஞ்சிலுவை சங்கம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்திற்கு மாநில துணைப் பொதுச்செயலாளர் தங்கவேல் பாண்டியன் தலைமை தாங்கினார்.


           மாவட்ட தலைவர் ரமேசு, மெகராஜூதின், பூபதி, ஜெயசந்திரன், சிங்கை ரவிச்சந்திரன், திருப்பூர் மாவட்ட செயலாளர் பர்வேஷ், நாகராஜ், பட்டணம் முருகேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். புறநகர் மாவட்ட செயலாளர் ஜெயபால் வரவேற்றார். ஆர்ப்பாட்டத்தை மாநில சிறுபான்மைபிரிவு தலைவர் மன்சூர் தொடங்கி வைத்தார்.


           மாநில நிர்வாகக் குழு உறுப்பினர் ஜி.எஸ்.குமார் சிறப்புரையாற்றினார். கோவை மாவட்ட அமைப்பு செயலாளர் ராஜேந்திரன் படையாச்சி, சுந்தரம், சிதம்பரம், வேலுமணி உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது சமச்சீர் கல்வியை நடப்பு ஆண்டிலேயே அமல்படுத்த கோரி கோஷங்கள் எழுப்பினர்.

0 கருத்துகள்: