காஞ்சிபுரம்:
சமச்சீர் கல்வியை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்ட பாமகவினர் 357 பேர் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனர்.
காஞ்சிபுரம் பெரியார் தூண் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு பாமக மாவட்ட செயலர் சங்கர் தலைமை தாங்கினார். சமச்சீர் கல்வியை இந்த ஆண்டே அமல்படுத்த வேண்டும், மாணவர்களுக்கு உடனடியாக பாட புத்தகங்களை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை இந்த ஆர்ப்பாட்டத்தின்போது பாமக-வினர் வலியுறுத்தினர். சமச்சீர் கல்விக்காக தமிழகம் முழுவதும் மாணவர்களும், பெற்றோர்களும் போராட்டம் நடத்தும் சூழ்நிலை உள்ளது. வாக்களித்த மக்களுக்கு ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் கல்வியை மறுப்பதும், மாணவர்களின் கல்வியில் விளையாடுவதும் கண்டிக்கத்தக்கது என்று பாமகவினர் தெரிவித்தனர்.
ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டதால் போலீசார் கைது செய்தனர். காஞ்சிபுரத்தில் 110 பேரும், மாவட்டம் முழுவதும் 357 பேரும் கைது செய்யப்பட்டனர்.காஞ்சிபுரத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் எம்எல்ஏ சக்தி பெ.கமலாம்பாள், மாவட்ட தலைவர் குமாரசாமி, நகர செயலர் முத்துசெல்வம், நகர தலைவர் உமாபதி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக