வேலூர்:
தமிழக பள்ளிகளில் சமச்சீர் கல்வியை உடனடியாக அமல்படுத்த கோரி மாநிலம் முழுவதும் செவ்வாய் கிழமை பா.ம.க.வினர் ஆர்பாட்டம் செய்தனர். வேலூர் மாவட்டதில் வேலூர் காட்பாடி, அரக்கோணம், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், ஆம்பூர், குடியாத்தம், ஆகிய ஊர்களில் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
அணைக்கட்டு தொகுதி எம்.எல்.ஏ. கலையரசு தலைமை தாங்கினார். முன்னாள் மத்திய மந்திரி சண்முகம், வரலட்சுமி, ஆகியோர் முன்னிலை வகித்தனர். முனனாள் மத்திய மந்திரி வேலு, மத்திய மாவட்ட செயலாளர் வெங்கடேசன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்த போது கலையரசு எம்.எல்.ஏக்கும் போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் கலையரசு எம்.எல்.ஏ. உள்பட 121 பேரை போலீசார் கைது செய்தனர். காட்பாடியில் தாலுகா அலுவலகம் முன்பு ஒன்றிய செயலாளர் பஞ்சாட்ராம் தலைமையில் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
மாவட்டம் தலைவர் ரமேஷ், மகளிர் அணியை சேர்ந்த மஞ்சுளா மணி, சுப்பிரமணி, வேலு உள்பட 34 பேரை போலீசார் கைது செய்தனர். மாவட்டம் முழுவதும் 589 பேர் கைது செய்யப்பட்டனர். பா.ம.க.வினர் ஆர்பாட்டத்தையொட்டி போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக