மதுராந்தகம் :
அரசு நெல் கொள்முதல் நிலையங்களில், விவசாயிகளிடம் நெல் வாங்க மறுக்கும் அதிகாரிகள் மீது, உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பா.ம.க., கோரிக்கை விடுத்துள்ளது.
மதுராந்தகம் ஒன்றிய பா.ம.க., நிர்வாகிகள் கூட்டம், மதுராந்தகத்தில் நடந்தது. ஒன்றிய செயலர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். மாநில துணைப் பொதுச்செயலர் கங்காதரன், மாவட்டச் செயலர் குமரவேல், மாவட்ட தலைவர் கோபாலகண்ணன் உட்பட பலர் கலந்து கொண்டு பேசினர்.
கூட்டத்தில் நிறை வேற்றப்பட்ட தீர்மானங்கள்
புதிய தலைமைச் செயலகத்தை, சிறப்பு மருத்துவமனையாக மாற்ற உத்தரவிட்ட, முதல்வர் ஜெயலலிதாவிற்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.
படாளம் கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு, நிரந்தரத் தொழிலாளர் நியமிக்க வேண்டும்,
விவசாயிகளுக்கு விதைக் கரும்புகள் வழங்க வேண்டும்,
தொடக்க வேளாண்மை கடன் சங்கங்களில், விவசாயத்திற்குத் தேவையான உரங்களை இருப்பு வைத்து, விவசாயிகளுக்கு உடனே வழங்க வேண்டும்,
அரசு நெல் கொள்முதல் நிலையங்களில், விவசாயிகளிடம் நெல் வாங்க மறுக்கும் அதிகாரிகள் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும்,
நெல் கொள்முதல் நிலையங்களில், விவசாயிகள் கொண்டுவரும் நெல்லை வாங்க, கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உட்பட, பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக