வானூர்:
பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் தூக்கு தண்டனையை ரத்து செய்ய வலியுறுத்தி விழுப்புரம் மாவட்டம் வானூர் ஒன்றிய பாமக சார்பில் திருச்சிற்றம்பலம் சந்திப்புச் சாலையில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மாவட்டத் தலைவர் சங்கர் தலைமை தாங்கினார். தெற்கு ஒன்றியச் செயலர் கோபால் தொடக்க உரையாற்றினார். மாநில செயற்குழு உறுப்பினர் சிவக்குமார் கண்டன உரையாற்றினார். வடக்கு ஒன்றியச் செயலர் ஏழுமலை, ஒன்றியத் தலைவர்கள் உலகநாதன், சுப்பிரமணி, கண்டமங்கலம் ஒன்றியச் செயலர்கள் அருள்மணி, சுகுமார், கோட்டகுப்பம் பஞ்சமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் ஒன்றியச் செயலர்கள் வி.சி.ஆறுமுகம், ஞானசேகர், பத்மநாபன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக