உளுந்தூர்பேட்டை:
பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் தூக்கு தண்டனையை ரத்து செய்ய வலியுறுத்தி உளுந்தூர்பேட்டை வட்டாட்சியர் அலுவலகம் முன் விழுப்புரம் (கிழக்கு) மாவட்ட பாமக சார்பில் திங்கள்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்துக்கு, மாநில துணைச் செயலர் அன்பழகன் தலைமை வகித்தார். நகரச் செயலர் ராஜேஷ் வரவேற்றார். முன்னாள் மாவட்டச் செயலர் வ.ச.சுரேஷ்குமார், வன்னியர் சங்க மாவட்டத் தலைவர் ந.பாலகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்டச் செயலர் துரை.சுப்பிரமணியம் கண்டன உரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் ஒன்றியச் செயலர்கள் சி.பாண்டியன், தவஞானம், நேரு உள்பட பாமகவினர் பலர் கலந்து கொண்டனர்.÷நகர இளைஞர் சங்கச் செயலர் கோபி நன்றி கூறினார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக