ஆரணி :
ராஜிவ் கொலையாளிகள் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் தூக்குத் தண்டனையை ரத்து செய்யக் கோரி திங்கள்கிழமை ஆரணியில் பாமகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆரணி வட்டாட்சியர் அலுவலகம் முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, கட்சியின் மாவட்டச் செயலர் ஆ.வேலாயுதம் தலைமை தாங்கினார். வன்னியர் சங்கத்தின் மாவட்டச் செயலர் ஆ.குமார், நகரச் செயலர் மார்க்கெட் ந.ரமேஷ், நகரத் தலைவர் வி.எஸ்.வெங்கடேசன், மாவட்ட அமைப்புச் செயலர் அ.க.ராஜேந்திரன், ஒன்றியச் செயலர்கள் மெய்யழகன், ஜெயக்குமார், வடிவேலு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக