விருதுநகர்:
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் தூக்கு தண்டனையை ரத்து செய்ய வலியுறுத்தி விருதுநகரில் பழைய பஸ் நிலையம் முன்பு பா.ம.க.வினர் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் செய்தனர்.
ஆர்ப்பாட்டத்துக்கு பா.ம.க. கிழக்கு மாவட்டச் செயலாளர் ராஜகோபால் தலைமை வகித்தார். கிழக்கு மாவட்ட அமைப்பாளர் ஜெகதீசன், மேற்கு மாவட்டச் செயலாளர் மாணிக்கம், மத்திய அமைப்புச் செயலாளர் ஜெயபால் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில துணை பொதுச்செயலாளர் லட்சுமணன் சிறப்புரையாற்றினார். இதில் பா.ம.க. நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக