ஆம்பூர்:
தூக்கு தண்டனையை ரத்து செய்யக் கோரியும், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள சாந்தன், பேரறிவாளன், முருகன் ஆகியோரின் தண்டனையை குறைக்க வலியுறுத்தியும் ஆம்பூர் பஸ் நிலையம் அருகில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
வேலூர் வடமேற்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி செயலர் ஆர்.டி. சாமுவேல் செல்லபாண்டியன் தலைமை வகித்தார். ஒன்றியச் செயலர்கள் ரவி, குமரவேல், ஜெயசீலன், ஆம்பூர் நகரச் செயலர் நசீர், மாவட்டத் தொழிற்சங்கச் செயலர் எஸ்.எஸ். மனோகரன், இளைஞர் அணி பாவேந்தன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக