திருப்பூரில் பா.ம.க. சார்பில் பேரறிவாளன், சாந்தன், முருகன் தூக்கு தண்டனையைக் குறைக்கக் கோரி ஆர்ப்பாட்டம்

திருப்பூர்:

            ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் தூக்கு தண்டனையை ரத்து செய்யக் கோரி பாமக சார்பில் திருப்பூரில் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது .

             மாநகராட்சி முன்பு நடந்த இந்த ஆர்ப்பாட்டத்துக்கு, தெற்கு மாவட்டச் செயலர் மு.ரமேஷ் தலைமை வகித்தார். தெற்கு நகரச் செயலர் கே.ஏ.கண்ணன் வரவேற்றார். வடக்கு மாவட்டச் செயலர் ராஜேந்திரன், வடக்கு மாவட்டத் தலைவர் கே.கே.சுப்பிரமணியம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில துணை பொதுச் செயலர் சி.வடிவேல் கவுண்டர் சிறப்புரையாற்றினார்.   

              ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் தூக்கு தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.   மாவட்டப் பொருளாளர் ராதாகிருஷ்ணன், மாவட்ட துணைச் செயலர் பிரகாஷ், பல்லடம் ஒன்றியச் செயலர் புருஷோத்தமன் உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.

0 கருத்துகள்: