காட்டுமன்னார்கோவில் :
உள்ளாட்சித் தேர்தலில் திராவிட கட்சிகளின் உறவு இல்லாமல் தனித்து போட்டியிடுவது என காட்டுமன்னார்கோவிலில் நடந்த பா.ம.க., செயற்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
காட்டுமன்னார்கோவில் ஒன்றிய, நகர பா.ம.க., செயற்குழுக் கூட்டம் ஒன்றிய தலைவர் செல்வராஜ் தலைமையில் நடந்தது. நகர செயலர் மோகன் வரவேற்றார். ஒன்றிய செயலர் கண்ணன் முன்னிலை வகித்தார். மாவட்ட செயலர் வேணு புவனேஸ்வரன் சிறப்புரையாற்றினார். முன்னாள் மாவட்டச் செயலர் கண்ணன், ஒன்றிய குழு உறுப்பினர் வரதராசன், ஒன்றிய நகர நிர்வாகிகள் பங்கேற்றனர். கூட்டத்தில் உள்ளாட்சித் தேர்தலில் திராவிட கட்சிகளோடு ஒட்டு உறவு இல்லாமல் தனித்து போட்டியிடுவது, கட்சிக்கு புதிய உறுப்பினர்கள் சேர்த்தல் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக