தண்டராம்பட்டு:
ராஜிவ் கொலையாளிகள் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் தூக்குத் தண்டனையை ரத்து செய்யக் கோரி திங்கள்கிழமை திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டில் பாமகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தண்டராம்பட்டு வட்டாட்சியர் அலுவலகம் முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, கட்சியின் வடக்கு மாவட்டச் செயலர் இல.பாண்டியன் தலைமை தாங்கினார். ஒன்றியச் செயலர்கள் சேட்டு, ஆறுமுகம், விஜயன், சாவித்ரி, ஜெயவேல், இளைஞரணி செயலர் மணியரசு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக