ஸ்ரீவைகுண்டத்தில் பா.ம.க. சார்பில் பேரறிவாளன், சாந்தன், முருகன் தூக்கு தண்டனையைக் குறைக்கக் கோரி ஆர்ப்பாட்டம்

ஸ்ரீவைகுண்டம்:

            ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் தூக்குத் தண்டனையை ரத்து செய்யக் கோரி ஸ்ரீவைகுண்டத்தில் பாமகவினர் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில்  ஈடுபட்டனர். 

           ஆர்ப்பாட்டத்துக்கு, மாவட்டச் செயலர் விஜயராஜா தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் சரவணன், ஒன்றியச் செயலர் வள்ளிநாயகம், தேர்தல் பணிக்குழுத் தலைவர் சுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் தூக்குத் தண்டனையை ரத்து செய்யக் கோரி கோஷமிட்டனர்.  மாநில கொள்கை விளக்க அணித் தலைவர் வியனரசு, கொள்கை விளக்க அணிச் செயலர் ராமச்சந்திரன், பஷீர்அகமது, விவசாய அணித் தலைவர் செல்வம், சிறுபான்மைப் பிரிவுச் செயலர் ரவி, முகமது நியாஸ், சீனிவாசன், ஜெயசிங், ஆனந்தராஜ், சிவபெருமாள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

2 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

உத்திரபிரதேசத்தில் செல்வி மாயாவதி அவர்கள் மக்கள் மத்தியில் தனி முத்திரை பதித்துள்ளார். புதுச்சேரியில் திரு.ரங்கசாமி அவர்கள் மக்கள் மத்தியில் தனி முத்திரை பதித்துள்ளார். கேரளாவில் பெரும்பான்மையான நாயர் சமூகத்தினர் முத்திரை பதித்துள்ளனர். கர்நாடகாவில் பெரும்பான்மையான கவுடா சமூகத்தினர் முத்திரை பதித்துள்ளனர். ஆந்திராவில் பெரும்பான்மையான ரெட்டி/நாயுடு சமூகத்தினர் முத்திரை பதித்துள்ளனர். இந்தியாவில் இன்னும் பல மாநிலத்தில் பெரும்பான்மை சமூகத்தினர் மட்டும்தான் முத்திரை பதித்துள்ளனர். தொடர்ந்து ஆட்சி செய்கின்றனர். ஆனால் தமிழ்நாட்டில் மட்டும், மண்ணின் மைந்தர்களான வன்னியர்கள் இன்னும் ஆளவில்லை. எனவே பாமக தமிழ்நாட்டில் தனி முத்திரை பதிக்கவேண்டும். உள்ளாட்சி தேர்தலை பொறுத்தவரை ஆளுங்கட்சி அதிகாரம், அராஜகம், அக்கிரமம், அமைச்சர்களின் தலையீடு, பணம் கொடுத்து ஓட்டு வாங்குவது இவற்றை ஒழிக்க வேண்டும். ஆளுங்கட்சிக்கு ஓட்டு போட்டால்தான் இலவசங்கள், மக்கள் நல திட்டங்கள் கிடைக்கும் என்ற மாயை உள்ளது. இதை தகர்த்து முறியடிக்கவேண்டும். மக்கள் சுதந்திரமாக வாக்களிக்க வேண்டும். கிராமப்புற மக்களுக்கு போதிய அரசியல் அறிவு இல்லை. எனவே பாமகவினர் திண்ணை பிரச்சாரம் செய்து ஏறத்தாழ 1 கோடி வன்னியர் வாக்காளர்களின் வாக்குகள் பாமகவுக்கு கிடைக்க செய்யவேண்டும். சினிமா கவர்ச்சி, இலவசம் கொடுத்து மக்களை ஏமாற்ற முடியாது என்ற எண்ணம் மக்களுக்கு வரவேண்டும். அதுபோல் அனைத்து அரசியல் கட்சிகளும் தனித்து நின்று போட்டியிட வேண்டும். அப்போதுதான் பிரச்சினை இல்லாமல் இருக்கும். தேர்தல் கமிசன் இதை செய்ய வேண்டும். ஒரு ருபாய் சம்பளம் வாங்கியவர், இன்று 51 கோடி ருபாய் சொத்து என்று சொல்கிறார். இது எப்படி என்று தெரியவில்லை. அதேபோல் மற்றொரு குடும்பமே, ஆசியாவிலேயே செல்வந்தர்களாக உள்ளனர். இது எப்படி என்று தெரியவில்லை. இந்த பணம் மக்களின் வரிப்பணம். பெரும்பான்மை வன்னியர்களுக்கு சேரவேண்டிய பணம் என்பதை மக்கள் உணரவேண்டும். பாமக ஆட்சி வரவேண்டியது காலத்தின் கட்டாயம்.