திட்டக்குடி பேரூராட்சி பா.ம.க. வேட்பாளர் வழக்கறிஞர் முருகேசனைஆதரித்து மருத்துவர் கோவிந்தசாமி வாக்கு சேகரிப்பு

திட்டக்குடி : 

        திட்டக்குடி பேரூராட்சி பா.ம.க., வேட்பாளரை ஆதரித்து டாக்டர் கோவிந்தசாமி ஓட்டு சேகரித்தார்.

           திட்டக்குடி பேரூராட்சித் தலைவர் பதவிக்கு பா.ம.க., சார்பில் போட்டியிடும் வழக்கறிஞர் முருகேசனையும், வார்டு கவுன்சிலர் பதவிகளுக்கு போட்டியிடும் சாவித்திரி, சின்னசாமி, ரங்கநாதன் உள்ளிட்ட 9 வேட்பாளர்களையும் ஆதரித்து பா.ம.க., மாநில சொத்து பாதுகாப்புக்குழு தலைவரும் விருத்தாசலம் முன்னாள் எம்.எல்.ஏ.,வுமான டாக்டர் கோவிந்தசாமி ஓட்டு சேகரித்தார்.

பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து பேசுகையில், 

             "திட்டக்குடியில் பாதாள சாக்கடைத் திட்டத்தினை நிறைவேற்றுவோம். வணிகர்களின் உற்ற நண்பனாய் பா.ம.க., விளங்கி வருகிறது. ஊழலற்ற நேர்மையான நிர்வாகத்தை வழங்குவோம்' என்றார். கூட்டத்தில் மாநில தேர்தல் பணிக்குழு தலைவர் தனபால், நகர செயலர் சரவணன், துணை செயலர் அசோக், ஒன்றிய செயலர் பழனிவேல் மற்றும் நிர்வாகிகள் ஒன்பது வார்டு வேட்பாளர்கள் உடனிருந்தனர்.

0 கருத்துகள்: