
சென்னை மாநகராட்சி பா.ம.க. மேயர் வேட்பாளர் ஏ.கே.மூர்த்தியை ஆதரித்து முன்னாள் மத்திய மந்திரி அன்புமணி ராமதாஸ் வியாசர்பாடி, கொடுங்கையூர் உள்பட பெரம்பூர் பகுதியில் திறந்த ஜீப்பில் சென்று மாம்பழம் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். முன்னதாக ஏ.கே.மூர்த்தி ஆர்.கே.நகர் பகுதியில் வீதி வீதியாக சென்று ஆதரவு திரட்டினார்.
அப்போது சென்னை மாநகராட்சி பா.ம.க. மேயர் வேட்பாளர் ஏ.கே.மூர்த்தி பேசியது
‘’என்னை மேயராக வெற்றி பெற செய்தால் எல்லா தரப்பு மக்களும் விரும்பும் நேர்மையான, திறமையான நிர்வாகத்தை தருவேன். சர்வதேச தரத்துக்கு இணையாக சென்னை நகரை மாற்றிக்காட்டுவேன். மாநகராட்சி மயான பூமிகள் அனைத்தும் நவீன முறையில் பராமரிக்கப்படும். மயானபூமி என்றாலே திரும்பி பார்க்க அச்சப்படும் நிலையை மாற்றி பூங்காக்கள் அமைத்து எழில் கொஞ்சும் பகுதியாக மாற்றி அமைப்பேன்.காவலாளிகள் நியமித்து பொழுது போக்குக்காக பொதுமக்கள் வந்து செல்லும் நிலையை உருவாக்குவேன்.
வழிபாட்டு தலங்களுக்கு தினமும் ஏராளமான மக்கள் வந்து செல்கிறார்கள். வழிபாட்டு தலங்களின் நிர்வாகிகள் அனுமதி பெற்று மாநகராட்சி ஊழியர்களே சுத்தம் செய்ய ஏற்பாடு செய்வேன். அவர்களை அசிங்கப்படுத்துவதை தடுத்து கோவில்கள், மசூதிகள், சர்ச்சுகள் இருக்கும் இடங்களை எல்லோரையும் கவரும் வகையில் பராமரிக்கப்படும். எனக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள் சென்னையில் மாற்றத்தை ஏற்படுத்துவேன்’’ என்று பேசினார். அவருடன் ஜெயராமன், சத்யா மற்றும் கவுன்சிலர் வேட்பாளர்கள் உடன் சென்றனர்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக