சேலம்:
சேலம்கோட்டை மைதானத்தில் சேலம் மாநகராட்சி மேயர் பா.ம.க. வேட்பாளர் இரா.அருள் மற்றும் 60டிவிசன் கவுன்சிலர் வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைக்கும் பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு சேலம் முன்னாள் எம்.எல்.ஏவும், மாநில துணை பொது செயலாளருமான மு.கார்த்தி தலைமை வகித்தார். மாநகர் மாவட்டசெயலாளர் கதிர்ராசரத்தினம் வரவேற்றார்.
பசுமை தாயகம் மாநில துணை செயலாளர் சி.பெ.சத்ரியசேகர், மாநில தேர்தல் பணிக்குழு செயலாளர் எம்.பி.சதாசிவம், வடக்குமாவட்ட செயலாளர் சாம்ராஜ், மாநகர் மாவட்ட தலைவர் அன்புக்கரசு, வடக்கு மாவட்ட தலைவர் சித்தேஸ்வரன் உள்பட பலர் முன்னிலைவகித்தனர். கூட்டத்தில் வேட்பாளர்களை டாக்டர் ராமதாஸ் அறிமுகம்செய்து வைத்து பேசினார்.
அப்போது டாக்டர் ராமதாஸ் கூறியது:-
பாமக போல் கொள்கை உள்ள கட்சி ஏதும் இல்லை. நல்ல கொள்கை உள்ள கட்சி பாமக. சேலத்திற்கு ரெயில்வே கோட்டம் கொண்டு வந்தோம். இதற்கு பெரும் முயற்சி மேற்கொண்டது ரெயில்வே அமைச்சர்களாக இருந்த வேலு, மூர்த்தித்தான். புதிய புதிய வழித்தடங்கள் மூலம் ரெயில்கள் விடப்பட்டது. புதிய ரெயில்களும் விட்டோம். இதுபோல் சேலத்தில் அதிநவீன மருத்துவமனை கொண்டு வந்தவர் டாக்டர் அன்புமணிராமதாஸ்தான். ஆட்சிசெய்யாத நிலையில் இருந்த நாங்கள் இவ்வளவையும் செய்துகொடுத்தோம்.
சேலம் மாநகராட்சி மேயர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர் இரா.அருளை வெற்றி பெற செய்தால் அவர் மாநகர மக்களுக்கு நல்லாட்சி தருவார். அவர் ஒரு சிறு தவறு கூட செய்யாமல் மக்களுக்கு உதவி செய்வார். இதனால் நாங்கள் மக்களுக்கு தொண்டு செய்ய ஒரு வாய்ப்பு தாருங்கள். மது இல்லாத தமிழகத்தை உருவாக்க பா.மக. வேட்பாளர்களை வெற்றி பெற செய்யுங்கள். இப்படி வேறு கட்சிகள் கூறமுடியுமா. மற்றவர்களால் இப்படி கூற முடியாது. ஒவ்வொரு வருடமும் நாங்கள் பட்ஜெட் போடுகிறோம்.
இதுபோல் வேறு கட்சிகள் போடுகிறதா. இல்லை. 600-க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்களை சிங்கள கடற்படை சுட்டு உள்ளது. இதற்கு ஆட்சியாளர்கள் என்ன செய்தார்கள். கச்சத்தீவு பிரச்சினை என்னானது. தமிழகத்திற்கு காவிரி தண்ணீர் தர மறுக்கிறது. பெரிய மழைபெய்தாலோ, அணைகளுக்கு ஆபத்து என்று வந்தாலோத்தான் காவிரியில் தண்ணீர் திறந்து விடுகிறார்கள். பாலாறு பாழாய் போய்கிடக்கிறது.
இவற்றை எல்லாம் பா.ம.க. மட்டும் தான் பேசிபோராடி வருகிறது. தமிழக மக்கள் வேறு ஒரு மாற்றத்தை விரும்புகிறார்கள். அந்த மாற்றத்தை இந்த தேர்தலில் ஏற்படுத்துங்கள். திராவிட கட்சிகளை ஒழிக்க வேண்டும்.அப்புறப்படுத்த வேண்டும். இந்த வேலைகளை பா.ம.க. செய்ய இருக்கிறது. தமிழகத்திற்கு மாற்றம் தேவை. மக்கள் நினைத்தால் இந்த மாற்றத்தை ஏற்படுத்தலாம். இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் மாநில தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏவுமான ஜி.கே. மணி, முன்னாள் எம்.எல்.ஏக்கள் தமிழரசு, கன்னையன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் க.சண்முகம் மற்றும் பலர் பேசினர். முடிவில் பழ.அன்பு நன்றி கூறினார்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக