திருவள்ளூர் :
உள்ளாட்சித் தேர்தலையொட்டி, திருவள்ளூரில் அனைத்துக் கட்சி வேட்பாளர்கள், தீவிர பிரசாரம் மேற்கொண்டுள்ளனர்.
திருவள்ளூர் நகர்மன்றத் தலைவர் பதவிக்கு பா.ம.க., சார்பில் குமார் அ.தி.மு.க., சார்பில் பாஸ்கரன், தி.மு.க., சார்பில் ஆதாம், காங்கிரஸ் சார்பில் வடிவேல், பா.ஜ.க., சார்பில் பாலாஜி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் சுரேஷ், மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மகேந்திரன் ஆகிய 7 பேர் போட்டியிடுகின்றனர்.
27 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு, பா.ம.க., அ.தி.மு.க., தி.மு.க., காங்கிரஸ், தே.மு.தி.க., பா.ஜ.க., இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் சார்பில், மொத்தம் 110 பேர் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டுள்ளனர். இதைத் தவிர, 39 சுயேச்சை வேட்பாளர்களும் களம் இறங்கியுள்ளனர்.
தேர்தல் நடைபெறுவதற்கு, இன்னும் ஒருவாரம் மட்டுமே உள்ளதால், வேட்பாளர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பிரதான கட்சிகளான, பா.ம.க.,தி.மு.க., அ.தி.மு.க., தே.மு.தி.க., ம.தி.மு.க., கட்சி வேட்பாளர்கள், திருவள்ளூர் நகரில் உள்ள அனைத்துப் பகுதிகளிலும், வீதி வீதியாகச் சென்று, ஓட்டுச் சேகரித்து வருகின்றனர்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக