சென்னை மாநகராட்சி பா.ம.க. மேயர் வேட்பாளர் ஏ.கே.மூர்த்தி புஷ்பாநகர், மகாலிங்கபுரம், பகுதிகளில் வாக்கு சேகரிப்பு


 http://mmimages.mmnews.in/Articles/2011/Oct/4490641e-d20f-4d26-b4be-eb835b8508ce_S_secvpf.gif
சென்னை:

         சென்னை மாநகராட்சி பா.ம.க. மேயர் வேட்பாளர் ஏ.கே.மூர்த்தி புஷ்பாநகர், மகாலிங்கபுரம், பகுதிகளில் திறந்த ஜீப்பில் சென்று மாம்பழம் சின்னத்துக்கு ஆதரவு திரட்டினார். 
அப்போது சென்னை மாநகராட்சி பா.ம.க. மேயர் வேட்பாளர் ஏ.கே.மூர்த்தி பேசியது:-

          இத்தனை ஆண்டுகளாக 2 கட்சிகளுக்கு மாறி மாறி ஓட்டு போட்டீர்கள். ஒருத்தர் சிங்கார சென்னையை உருவாக்குவோம் என்றார். இன்னொருத்தர் எழில்மிகு சென்னையை உருவாக்குவோம் என்றார். ஒழுகாத வீடு, உடுத்த உடையெல்லாம் தருவோம் என்று வாக்குறுதி தந்தார்கள். நிறைவேற்றினார்களா?  குறுகிய சென்னையில் கூட குப்பை களை அகற்றி சுகாதாரத்தை கொடுக்கவில்லை. இனி கரேட்டர் சென்னையை எப்படி அழகுபடுத்துவார்கள்? ஆளுங்கட்சி ஆட்சிக்கு வந்தால்தால் திட்டங்களை நிறைவேற்ற முடியும் என்ற தவறான பிரசாரத்தை செய்கிறார்கள். இதுவரை ஆளுங் கட்சி மேயர்கள் இருந்தபோது என்ன சாதித்தார்கள்?

                சில பாலங்கள், பூங்காக் களை உருவாக்கினால் போதுமா? மக்களின் அடிப் படை தேவைகள் பூர்த்தியாகி விடுமா? மெயின் ரோடுகள் நன்றாக உள்ளது. உட்புற பகுதிகள் பல இடங்களில் கிராமப்பகுதிகளை விட மோசமாக உள்ளது. எனக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள். சென்னையின் முன்னேற்றத்துக்காக பல திட்டங்கள் வைத்து இருக்கிறேன். பள்ளிகளில் தரமான கட்டிடங்கள், தரமான கல்வி, சுமையில்லாத கல்வி, கட்டாய கல்வி, சுகாதார மான குடிநீர், நல்ல சாலைகள், குப்பை யில்லாத, கொசு ஆதிக்கம் இல்லாத சென்னையை உருவாக்குவேன். குடிசை மாற்று வாரிய அடுக்குமாடி குடியிருப்பு களுக்கு வீடுகள் தோறும் குடிநீர் இணைப்பு வழங்குவேன்.

            தமிழர் திருநாளில் ஏழைகள் வசிக்கும் குடிசை மாற்று வாரிய வீடுகள் வெள்ளையடித்து தரப்படும். நீங்க நல்லா இருக்க பா.ம.க.வுக்கு ஆதரவு தாருங்கள். மாம்பழம் சின்னத்தில் வாக்களித்து என்னை வெற்றி பெற செய்தால் சொன்னதை செய்து உங்களிடம் பாராட்டு பெறுவேன்.  இவ்வாறு அவர் பேசினார்.

0 கருத்துகள்: