வடலூரில் உள்ளாட்சி மன்ற தேர்தலில் போட்டியிடும் பாமக வேட்பாளர்களை ஆதரித்து ராமதாஸ் பிரசாரம்

வடலூர்:

வடலூரில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தேர்தல் பிரசாரம் செய்தார். 
 
அப்போது பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பேசியது:-

          தமிழகத்தில் பா.ம.க. மட்டுமே வித்தியாசமான கட்சி ஆகும். இதுபோன்ற கட்சி தமிழகத்தில் இல்லை. அப்படிப்பட்ட கட்சி ஏதாவது இருந்தால் நானே அந்த கட்சியில் சேர்ந்துக்கொள்வேன். தமிழகம் முழுவதும் 12 மாவட்டங்களை சுற்றி வந்தேன். பா.ம.க.வுக்கு ஆதரவு பெருகி வருகிறது. திராவிடக்கட்சிகள் கொள்கை இல்லாத கட்சி. அந்த கட்சி மீண்டும் ஆண்டால் தமிழகம் மன்னிக்காது. இலவசங்களை கொடுத்து மக்களை முன்னேற்ற முடியாது. அப்படி முன்னேற்ற முடியும் என்று எந்த அறிஞர்களும் கூற வில்லை.

          இலவசமாக அரிசி, மிக்சி, கிரைண்டர் கொடுத்து மக்களை ஏமாற்றுகிறார்கள். மக்களின் உழைப்பைத்தான் கெடுத்து விட்டார்கள். கிராமம் வளர்ச்சி அடைகிறது என்கிறார்கள். மக்கள் நகரங்களை நோக்கி செல்கிறார்கள். முன்பு கிராமத்தில் 80 சதவீதமாகவும், நகரம் 20 சதவீதமாகவும் இருந்தது. இன்றைக்கு இரண்டும் சமமாக ஆகிற வகையில் நகர்புற வளர்ச்சி அதிகமாக இருக்கிறது.  கிராமங்கள்தான் இந்தியாவின் முதுகெலும்பு என்பது மாறி இன்றைக்கு விளை நிலங்கள் பறிபோகிறது. எதிர்காலத்தில் இந்த நிலை மாற 2016ல் பா.ம.க. ஆட்சி அமைக்கும் வகையில் திட்டம் தீட்டி செயல்படுகிறோம். அதன் மூலம் தமிழகம் வளர்ச்சி பெறும். சாராயம் இல்லாத நகரம் கிராமம். அதன் மூலம் அமையும். இவ்வாறு டாக்டர் ராமதாஸ் பேசினார். 

0 கருத்துகள்: