சேலம் மாநகராட்சி பா.ம.க. மேயர் வேட்பாளர் இரா.அருளை ஆதரித்து அன்புமணி ராமதாஸ் பிரசாரம்



 http://mmimages.mmnews.in/Articles/2011/Oct/e6c046c6-8ea7-4864-960e-396bc791dfa1_S_secvpf.gif
 
சேலம்:

        சேலம் மாநகராட்சி மேயர் பா.ம.க. வேட்பாளராக மாநில இளைஞர் அணி செயலாளர் இரா.அருள் நிறுத்தப்பட்டு உள்ளார். இவரை ஆதரித்து முன்னாள் மத்திய அமைச்சர்   டாக்டர் அன்புமணி ராமதாஸ் நேற்று சேலம் வந்து பிரசாரம் செய்தார்.

அப்போது முன்னாள் மத்திய அமைச்சர்   டாக்டர் அன்புமணி ராமதாஸ்
பேசியது:-

         எங்களது வேட்பாளர்கள் சொன்னதை செய்து தருவார்கள். உங்களுக்காக உழைக்க மேயர் வேட்பாளரான இரா.அருளுக்கு வாக்களித்து அவரை அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்யுங்கள். மாறி மாறி திராவிட கட்சிகளுக்கு ஓட்டு போட்டீர்கள். அவர்கள் ஏதும் செய்து தரவில்லை. அவர்கள் ஏதும் சாதிக்கவில்லை. எங்களுக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள்.  நாங்கள் சாதித்து காட்டுகிறோம். அவர்கள் வசனம் மட்டும் பேசி சென்று விடுவார்கள். ஆனால் நாங்கள் சொன்னதை செய்து தந்து பாராட்டு பெறுவோம். சேலம் திருமணிமுத்தாற்றில் முன்பு தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும். இதில் மக்கள் குளிப்பார்கள் என கேள்விப்பட்டு இருக்கிறேன். ஆனால் இந்த ஆற்றின் இன்றைய நிலை என்ன? இதை நாங்கள் மாற்றி காட்டி பழைய நிலைக்கு கொண்டு வருவோம்.

             சுத்தம் சுகாதாரத்திற்கு முன்னுரிமை தருவோம்.சேலத்தை பசுமை நகராக்க ஒரு வாய்ப்பு தாருங்கள். கொசுவை முற்றிலும் ஒழிப்போம், இந்த ஒரு முறை பா.ம.க.விற்கு வாய்ப்பு தந்து ஓட்டு போடுங்கள். நாங்கள் நல்ல நல்ல திட்டங்களை கொண்டு வருவோம். முதலமைச்சர் ஜெயலலிதா மின்வெட்டு இல்லாமல் செய்வோம் என்றார். இப்போது மின் விட்டு இல்லாமலா? உள்ளது. நாங்கள் இதை சரிசெய்வோம். திராவிட கட்சிகள்ஏதும் மக்களுக்கு செய்யவில்லை. எங்களுக்கு நீங்கள் ஒரு வாய்ப்பு கொடுத்து பாருங்கள். மக்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளை செய்து காட்டி சாதனை படைப்போம். இவ்வாறு அவர் கூறினார்.

                இந்த சுற்றுப்பயணத்தின் போது மாநில துணை பொது செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏவுமான மு.கார்த்தி, பசுமை தாயகம் மாநில துணை செயலாளர் சத்ரியசேகர், மாநில தேர்தல் பணிக்குழு தலைவர் எம்.பி.சதாசிவம், சேலம் மாநகர் மாவட்ட செயலாளர் கதிர்ராசரத்தினம், பகுதி செயலாளர் அண்ணாமலை, பூபாலன், பெரியசாமி, பழஅன்பு, ராஜமாணிக்கம், வடக்கு மாவட்ட செயலாளர் சாம்ராஜ், மாநகர் மாவட்ட தலைவர் அன்புக்கரசு, கவுன்சிலர் அருள், எஸ்.பி. ஆறுமுகம், சாம், பழ அன்பு, ராஜமாணிக்கம், திரிசங்கு, பூபதி, மார்க்கெட் சண்முகம், ரவி உள்பட பலர் கலந்து கொண்டனர். 
 

0 கருத்துகள்: