ஜெயங்கொண்டம் நகர்மன்றத் தலைவர் பதவிக்கு போட்டியிடும் பா.ம.க வேட்பாளர்களை ஆதரித்து ராமதாஸ் பிரசாரம்

ஜெயங்கொண்டம்:


         ஜெயங்கொண்டம் நகர்மன்றத் தலைவர் உள்ளிட்ட பல்வேறு உள்ளாட்சிப் பதவிகளுக்கு போட்டியிடும் பாமக வேட்பாளர்களை ஆதரித்து, பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் செவ்வாய்க்கிழமை பிரசாரம் மேற்கொண்டார். 

பாமகசார்பில் ஜெயங்கொண்டம் நகர்மன்றத் தலைவர் பதவிக்கு போட்டியிடும் லட்சுமி ரங்கநாதன் உள்ளிட்ட கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்து அண்ணா  சிலை அருகே பிரசாரத்தின் போது பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பேசியது:

              திராவிட இயக்கங்கள் 42 ஆண்டுகளாக மக்களைச் சுரண்டி, கொள்ளையடித்து வருகின்றன. உள்ளாட்சித் தேர்தல் மிகமிக முக்கியமானது. இதில் அதிக இடங்களிள் பாமக வெற்றி பெற வேண்டும். அப்போதுதான் மக்களின் அடிப்படைத் தேவைகளான குடிநீர், தெரு விளக்கு, சாலை வசதி போன்றவைகளை நிறைவேற்ற முடியும்.  இப்போது, மூன்றில் ஒரு பங்கு இடங்கள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. இதை 50 சதமாக மாற்ற வேண்டும். பாமக ஆட்சிக்கு வந்தால், உள்ளாட்சி அமைப்பின் அனைத்துப் பொறுப்புகளிலும் பெண்களே இருப்பார்கள் என்றார் அவர். பிரசாரத்தில் கட்சியின் தலைவர் கோ க. மணி, சட்டப்பேரவை உறுப்பினர் ஜெ. குரு, கட்சியின் அரியலூர் மாவட்டச் செயலர் க. வைத்தி, பாலு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.


0 கருத்துகள்: