செங்கல்பட்டு:
திமுக, தேமுதிக, அதிமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளிலிருந்து விலகி 40 பெண்கள் உள்பட 200-க்கும் மேற்பட்டோர் பாமகவில் இணைந்தனர். இதற்கான விழா செங்கல்பட்டு எம்எல்ஏ திருக்கச்சூர் ஆறுமுகம் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது.
தெற்கு மாவட்டச் செயலர் பொன். கங்காதரன், சித்தாமூர் கரீம், பசுமை தாயகம் மாவட்ட அமைப்பாளர் குமரவேல் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் பங்க் வெங்கடேசன் வரவேற்று பேசினார். வெங்கடேசபுரம் முன்னாள் திமுக கவுன்சிலர் கோவிந்தசாமி, பெருங்கரணை கன்னியப்பன், திமுகவைச் சேர்ந்த முன்னாள் ஊராட்சி ஒன்றியத் தலைவர் அமிர்தம்மாள் கன்னியப்பன், திமுக ஒன்றிய பிரதிநிதி வெங்கடாசலபதி, வி.மோகனா உள்ளிட்டோர் பாமகவில் இணைந்தவர்களில் முக்கியமானவர்களாவர்.
பெருங்கரணை, பொலம்பாக்கம், கீழ்மருவதூர், பதூர், வெங்கடேசபுரம், ஆனந்தபுரம், பொறையூர், சித்தாமூர் மேற்கு ஒன்றியம் ஆகிய பகுதிகளிலிருந்து திமுக, அதிமுக, தேமுதிக காங்கிரஸ் ஆகிய கட்சிகளிலிருந்து விலகி பாமகவில் இணைந்த அக் கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக