பாமக நிர்வாகிகள் தேர்வு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பாமக நிர்வாகிகள் தேர்வு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

கடலூர் மேற்கு மாவட்ட பா.ம.க, நிர்வாகிகள் நியமனம்

திட்டக்குடி : 

           கடலூர் மேற்கு மாவட்ட பா.ம.க., விற்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப் பட்டனர். புவனகிரி, விருத்தாசலம், திட்டக்குடி சட்டசபை தொகுதிகளுக்குட்பட்ட கடலூர் மாவட்டத்திற்கு (மேற்கு) புதிய நிர்வாகிகளை மாநிலத் தலைவர் மணி நியமித்துள்ளார். தலைவராக செம்பேரி ஆடியபாதம், மாவட்டச் செயலராக சேத்தியாத்தோப்பு சின்னதுரையும் நியமிக்கப்பட்டுள்ளனர்

விழுப்புரம் மாவட்டத்தில் பாமக நிர்வாகிகள் மாற்றம்

விழுப்புரம்:

            தேர்தல் பணியில் கூட்டணிக் கட்சியினருக்கு முழுமையாக இறங்கி பணியாற்றாததால் தமிழகம் முழுவதும் 1560 நிர்வாகிகளை பாமக நிறுவனர் ராமதாஸ் அதிரடியாக நீக்கியுள்ளார்.  

              தமிழகத்தில் உள்ள வருவாய் மாவட்டத்தில் உள்ள 2 தொகுதிகளுக்கு ஒரு மாவட்டச் செயலர் என்றும், மாவட்டத்துக்கு ஒரு மாநில துணைப் பொதுச் செயலர் என்றும் நிர்வாகிகள் நியமிக்கப்பட்டிருந்தனர்.  இதேபோல் மாணவர் அணி, விவசாய அணி என்று ஒரு மாவட்டத்துக்கு 52 செயலர்கள் வீதம் 30 மாவட்டங்களில் 1560 மாவட்டச் செயலர்கள் இருந்தனர்.  இந்த நிர்வாகிகளுக்கு பக்குவமின்மையும், தொண்டர்களை அரவணைத்துப் போகும் மனப்பக்குவம் இல்லாததால் கட்சித் தொண்டர்களிடையை அதிருப்தி நிலவியது.  

             அதேபோல் தற்போது சட்டப்பேரவை உறுப்பினர்களாக உள்ள 18 பேரில் 7 பேருக்கு மட்டுமே இந்த தேர்தலில் வாய்ப்பளிக்கப்பட்டது. புதிதாக அறிவிக்கப்பட்ட பெரும்பாலான வேட்பாளர்கள் தொகுதியை சாராதவர்களாக இருந்தனர். உதாரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் மயிலம், செஞ்சி ஆகிய தொகுதிகளுக்கு வெளிமாவட்டங்களிலிருந்து வந்தவர்கள் போட்டியிட்டனர்.

             சில திமுக மாவட்டச் செயலர்கள் இப்பிரச்னையை ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் ஆகியோரின் கவனத்துக்கும், தங்கள் கட்சி தலைமைக்கும் கொண்டு சென்றனர். இதனால் பாமக தலைமை, சம்மந்தப்பட்ட நிர்வாகிகளை தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஒழுங்காக பணியாற்றக் கூறியும் பலர் ஈடுபாட்டுடன் செயல்படவில்லை.  

                இந்நிலையில் அண்மையில் முதல்வர் கருணாநிதியை சந்தித்த ராமதாஸிடம், தனது மனக்குறையை கருணாநிதி தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் ராமதாúஸ அதிர்ச்சியடைந்துள்ளார்.  இதனால் வந்த வேகத்தில் அனைத்து மாவட்டச் செயலர்களின் பதவிகளும் பறிக்கப்படுவதாகவும், மாநில துணைப் பொதுச் செயலர்களாக உள்ளவர்கள் ஒருங்கிணைந்த மாவட்டச் செயலர்களாக செயல்படுமாறும் தெரிவித்துள்ளார்.   வெளிப்படையாக அறிவிக்கப்படாமல் தனித்தனியாக தொலைபேசியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகம் முழுவதும் உள்ள 1560 மாவட்ட நிர்வாகிகளின் பதவி பறிக்கப்பட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்ட பாமக நிர்வாகிகள் நியமனம்

உளுந்தூர்பேட்டை:

              பாட்டாளி மக்கள் கட்சியின் விழுப்புரம் (கள்ளக்குறிச்சி) மாவட்ட ஒன்றிய, நகர மற்றும் பேரூராட்சி நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

 ஒன்றியச் செயலர்கள்: 

சின்னசேலம் (வடக்கு)- கோவிந்தன், 
தெற்கு- முத்துவேல், 

கள்ளக்குறிச்சி(வடக்கு)- எஸ்.டி.ராமு, 
(தெற்கு)- சரவணன், 

கல்வராயன்மலை(வடக்கு)- கண்ணன், 
(தெற்கு)- சம்பத், 

ங்கராபுரம்(வடக்கு)- கிருஷ்ணகுமார், 
(தெற்கு)- லோகநாதன், 

தியாகதுருகம் (வடக்கு)- ஏழுமலை,
(தெற்கு)- தண்டபாணி.

 கள்ளக்குறிச்சி நகரச் செயலர்- அபுசாலிக், 

பேரூராட்சி செயலர்கள்: 

                     சின்னசேலம்- செல்வராஜ், சங்கராபுரம்- பப்லு, வடக்கனந்தல்- துரைசாமி, தியாகதுருகம்- செல்வம்.

                 இவர்களை மாநில துணைச் செயலர் ம.அன்பழகன் பரிந்துரையின் பேரில் பாமக நிறுவனர் ராமதாஸ் அனுமதியின் பேரில் பாமக தலைவர் கோ.க.மணி எம்எல்ஏ நியமனம் செய்துள்ளார்.

சிதம்பரத்தை அடுத்த குமராட்சி ஒன்றிய பாமக நிர்வாகிகள் நியமனம்


சிதம்பரம்:

              சிதம்பரத்தை அடுத்த குமராட்சி ஒன்றிய பாமக செயலராக சா.சந்தானகுமார், பரங்கிப்பேட்டை (தெற்கு) ஒன்றியச் செயலராக சௌ.ராஜா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களை மாநில பாமக தலைவர் கோ.க.மணி, வன்னியர் சங்கத் தலைவர் ஜே.குரு, பாமக துணைப் பொதுச் செயலர் தி.திருமால்வளவன் ஆகியோர் பரிந்துரையின் பேரில் கடலூர் (தெற்கு) மாவட்டச் செயலர் வழக்கறிஞர் வேணு. புவனேஸ்வரன் நியமனம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.

பாமக மாநில துணைத் தலைவர் சீதாராமன்

திருவள்ளூர்:
            பாமக மாநில துணைத் தலைவராக கோ.சீதாராமன்  நியமனம் செய்யப்பட்டுள்ளார். பாமகவில் திருவள்ளூர் மேற்கு மாவட்டச் செயலராக இதுவரை கோ.சீதாராமன் பதவி வகித்து வந்தார். இந்நிலையில் கடந்த 13-ம் தேதி பாமக நிறுவனர் ராமதாஸ், கோ.சீதாராமனை மாநில துணைத் தலைவராக பதவி நியமனம் செய்தார்.

மாற்றுக் கட்சியிலிருந்து விலகி பாமக-வில் இணையும் விழா

செங்கல்பட்டு:

             திமுக, தேமுதிக, அதிமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளிலிருந்து விலகி 40 பெண்கள் உள்பட 200-க்கும் மேற்பட்டோர் பாமகவில் இணைந்தனர். இதற்கான விழா செங்கல்பட்டு எம்எல்ஏ திருக்கச்சூர் ஆறுமுகம் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது. 

             தெற்கு மாவட்டச் செயலர் பொன். கங்காதரன், சித்தாமூர் கரீம், பசுமை தாயகம் மாவட்ட அமைப்பாளர் குமரவேல் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் பங்க் வெங்கடேசன் வரவேற்று பேசினார்.  வெங்கடேசபுரம் முன்னாள் திமுக கவுன்சிலர் கோவிந்தசாமி, பெருங்கரணை கன்னியப்பன், திமுகவைச் சேர்ந்த முன்னாள் ஊராட்சி ஒன்றியத் தலைவர் அமிர்தம்மாள்  கன்னியப்பன், திமுக ஒன்றிய பிரதிநிதி வெங்கடாசலபதி, வி.மோகனா உள்ளிட்டோர் பாமகவில் இணைந்தவர்களில் முக்கியமானவர்களாவர்.

              பெருங்கரணை, பொலம்பாக்கம், கீழ்மருவதூர், பதூர், வெங்கடேசபுரம், ஆனந்தபுரம், பொறையூர், சித்தாமூர் மேற்கு ஒன்றியம் ஆகிய பகுதிகளிலிருந்து திமுக, அதிமுக, தேமுதிக  காங்கிரஸ் ஆகிய கட்சிகளிலிருந்து விலகி பாமகவில்  இணைந்த அக் கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.


பாட்டாளி மக்கள் கட்சியின் புதிய மாவட்ட நிர்வாகிகள்

திருச்சி:

              பாட்டாளி மக்கள் கட்சியின் மாநிலத் துணைத் தலைவராக திருச்சியைச் சேர்ந்த உ. கண்ணதாசன், துணைப் பொதுச் செயலராக க. உமாநாத் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.  

புதிய நிர்வாகிகளின் விவரம்:  

               ஒருங்கிணைந்த திருச்சி மாவட்ட அமைப்புச் செயலர்- சு. கதிர்ராசா, மாநில இளைஞரணி துணைச் செயலர்- ம. பிரின்ஸ், மாநில சட்டப் பாதுகாப்புக் குழு துணைச் செயலர்- ரெ. செந்தில்குமார், மாநில தொழில்சங்க துணைச் செயலர்- வீ. குமார்.  திருச்சி மாநகர் மாவட்டச் செயலர்- பி.கே. திலீப்குமார், தலைவர்- கா. முஸ்தபா, பொருளாளர்- மஜ்ரா தசமணி. கிழக்கு மாவட்டச் செயலர்- லீமா சிவக்குமார், தலைவர்- தி. கிள்ளிவளவன், பொருளாளர்- அஞ்சலை.  மேற்கு மாவட்டச் செயலர் பெ. மனோகரன், தலைவர்- ரா. ஜான்ரஸ்கின், பொருளாளர்- கோ. ரெங்கநாயகி. தெற்கு மாவட்டச் செயலர்- சு. தியாகு, தலைவர்- இரா. அரசு ரவி, பொருளாளர்- வசந்தா மேரி.  

               மாநிலத் தலைமையின் அதிகாரப்பூர்வமான இந்தப் பட்டியலை பாட்டாளி இளைஞர் சங்க மாநிலச் செயலர் த. அறிவுச்செல்வன் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களிடம் வெளியிட்டார்.  வரும் 6-ம் தேதி திருச்சியில் நடைபெறவுள்ள திருச்சி, கரூர், புதுக்கோட்டை மாவட்டங்களின் பொதுக் குழுக் கூட்டத்தில் பங்கேற்க முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி வருவதாகவும் அறிவுச்செல்வன் தெரிவித்தார்.

கடலூர் மாவட்ட பாமக மாவட்டச் செயலர் நியமனம்

சிதம்பரம்:

          கடலூர் (தெற்கு) மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சிச் செயலராக சிதம்பரத்தைச் சேர்ந்த வேணு. புவனேஸ்வரன்  நியமிக்கப்பட்டுள்ளார். தமிழக பெருந்தலைவர் சங்கத் தலைவராகவும், கீரப்பாளையம் ஒன்றிய பெருந்தலைவராக இருந்த தேவங்குடி மைனர் வேணுகோபாலின் மகன் புவனேஸ்வரன். இவர் இதற்கு முன்பு பாட்டாளி மக்கள் கட்சி சிதம்பரம் நகரச் செயலராகவும், மாநில பொதுக் குழு உறுப்பினர் மற்றும் செயற்குழு உறுப்பினராகவும், மாநில விளம்பர அணிச் செயலராகவும் பணியாற்றிவர்.

தனித்துப் போட்டியிடவும் தயார்: டாக்டர் அன்புமணி


சென்னை:

           சட்டப் பேரவைத் தேர்தலில் பென்னாகரம் ஃபார்முலாவை பின்பற்றவும் பாமக தயாராக இருப்பதாக முன்னாள் மத்திய அமைச்சரும், பாமக இளைஞரணித் தலைவருமான டாக்டர் அன்புமணி தெரிவித்தார். சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பாமக சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் கூட்டணி குறித்து முடிவெடுக்கும் அதிகாரம் கட்சியின் நிறுவனர் ராமதாசுக்கு  வழங்கப்பட்டது. 

கூட்டத்தில் அன்புமணி பேசியதாவது: 

            கூட்டணி பற்றி தெரிந்து கொள்வதில் அனைவரும் ஆர்வமாக இருக்கிறீர்கள். பாமக இந்தப் பக்கமா, அந்தப் பக்கமா என்று பத்திரிகைகள் எழுதுகின்றன.கூட்டணி குறித்து யாரும் கவலைப்பட வேண்டாம். அதுகுறித்து ராமதாஸ் முடிவு செய்வார். தேர்தலுக்கு இன்னும் கால அவகாசம் உள்ளது.தேவைப்பட்டால் பென்னாகரம் ஃபார்முலாவைக் கூட பின்பற்ற தயாராக இருக்கிறோம். செல்வாக்குள்ள 80 தொகுதிகளை அடையாளம் கண்டு அதில் கட்சியை பலப்படுத்த வேண்டும்.கட்சியை பலப்படுத்துவதுதான் நமது நோக்கமாக இருக்க வேண்டும். அதற்காக நாம் கூட்டணி அமைக்க மாட்டோம் என்றும் எடுத்துக் கொள்ள வேண்டாம் என்றார்.கூட்டத்தில் ராமதாஸ் பேசியதாவது: பழைய நிர்வாகிகளும், தற்போது தேர்வு செய்யப்பட்டுள்ள புதியவர்களும் போட்டி போட்டுக் கொண்டு கட்சிப் பணியில் ஈடுபட வேண்டும். அப்படி பணிபுரிபவர்களுக்கு என் மூலமாகவோ, அன்புமணி மூலமாகவோ மீண்டும் பதவி கிடைக்கும்.பாமகவில் ஏராளமான இளைஞர்களை சேர்க்க வேண்டும். 
 
            பாமகவை இளைஞர்கள் கட்சியாக மாற்ற வேண்டும். அதற்காகவே இளைஞரணித் தலைவராக அன்புமணி மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். சமூக நீதிக்காகவும், சுற்றுச்சூழலுக்காகவும் பாமகவைப் போல பாடுபட்ட கட்சி எதுவும் இல்லை. பசுமைத் தாயகம் அமைப்பு மூலம் நாங்கள் செய்துள்ள சாதனைகள் எண்ணற்றவை. பாமக ஒரு பசுமைக் கட்சியாகும்.பந்திக்காக அலைகிறோம் என்று நம்மைப் பற்றி பத்திரிகைகளில் எழுதுகிறார்கள். நாமும் பந்தி போடும் காலம் வரும்.பாமக தொண்டர்கள் அனைவரும் குறைந்தபட்சம் 10 மரக் கன்றுகளை நட்டு வளர்க்க வேண்டும். அதற்கான சான்றிதழை கிராம நிர்வாக அலுவலரிடம் இருந்து பெற வேண்டும். நானும், அன்புமணியும் 10 மரக் கன்றுகளை நட்டு சான்றிதழ் பெறப் போகிறோம் என்றார் ராமதாஸ். பென்னாகரம் இடைத் தேர்தலில் பாமக தனித்துப் போட்டியிட்டு 40 ஆயிரம் வாக்குகளுடன் 2-வது இடத்தைப் பிடித்தது. அதுபோலவே 2011 சட்டப் பேரவைத் தேர்தலிலும் தனித்துப் போட்டியிடவும் தயங்க மாட்டோம் என்பதை அன்புமணி சூசகமாகத் தெரிவித்துள்ளார்.

ஜூலை 7ல் புதிய தலைவரைத் தேர்வு செய்ய பாமக சிறப்பு பொதுக்குழு கூடுகிறது

           பாட்டாளி மக்கள் கட்சியின் புதிய தலைவர் உள்ளிட்ட நிர்வாகிகளைத் தேர்வு செய்வதற்காக கட்சியின் சிறப்பு பொதுக்குழுக் கூட்டம் ஜூலை 7ம் தேதி சென்னையில் கூடுகிறது.

இதுதொடர்பாக பாமக தலைவர் ஜி.கே.மணி வெளியிட்டுள்ள அறிக்கையில்,

               பாட்டாளி மக்கள் கட்சியின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் வருகிற 7-ந் தேதி, சென்னையில் கூடுகிறது. மெரினா கடற்கரை காமராஜர் சாலையை ஒட்டியுள்ள சுவாமி சிவானந்தா சாலையில் அமைந்துள்ள அண்ணா கலையரங்கத்தில் காலை 10 மணி அளவில் நடக்கிறது. இக்கூட்டத்திற்கு நிறுவன தலைவர் டாக்டர் ராமதாஸ் முன்னிலை வகிக்கிறார். கட்சியின் தலைவர் ஜி.கே.மணி தலைமை வகிக்கிறார். இக்கூட்டத்தில் கட்சியின் தலைவர், பொது செயலாளர் உள்ளிட்ட புதிய மாநில நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.

                இதில் கட்சியின் மாவட்ட செயலாளர்கள், தலைவர்கள், பொருளாளர்கள், கட்சியின் மாநகர, நகர, ஒன்றிய, அளவிலான அனைத்து நிர்வாகிகள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.


புதுக்கோட்டை மாவட்ட பாமக நிர்வாகிகள் தேர்வு


அறந்தாங்கி:

                          புதுக்கோட்டை மாவட்ட பாமக நிர்வாகிகள் தேர்வு திண்டிவனம் தைலாபுரத்தில் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தலைமையிலும், மாநில தலைவர் கோ.க.மணி, சட்டப்பேரவை உறுப்பினர் தி. வேல்முருகன் முன்னிலையிலும் திங்கள்கிழமை நடைபெற்றது.  கூட்டத்தில், மாநில துணைப் பொதுச் செயலராக அறந்தாங்கி மருத்துவர் சுப. அருள்மணியும், புதுக்கோட்டை மேற்கு மாவட்டச் செயலராக தரணி ம. ரமேசு, புதுக்கோட்டை கிழக்கு மாவட்டச் செயலராக முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் செ. வெள்ளச்சாமியும், புதுக்கோட்டை வடக்கு மாவட்டச் செயலராக வெ.சசிக் குமாரும் நியமிக்கப்பட்டனர்.  புதுக்கோட்டை குமார், அன்னவாசல் தியாகராஜன், அறந்தாங்கி இராம. துரைராஜன், திருவரங்குளம் வீ. கணேசன், கந்தர்வகோட்டை பழனிமாணிக்கம், குன்றன்டார்கோயில் மாரிமுத்து ஆகியோர் ஒன்றியச் செயலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்   மாநில துணைப் பொதுச் செயலர் மருத்துவர் சுப. அருள்மணி வெளியிட்ட செய்திக் குறிப்பில் இதைத் தெரிவித்துள்ளார்.