விழுப்புரம் மாவட்டத்தில் பாமக நிர்வாகிகள் மாற்றம்

விழுப்புரம்:

            தேர்தல் பணியில் கூட்டணிக் கட்சியினருக்கு முழுமையாக இறங்கி பணியாற்றாததால் தமிழகம் முழுவதும் 1560 நிர்வாகிகளை பாமக நிறுவனர் ராமதாஸ் அதிரடியாக நீக்கியுள்ளார்.  

              தமிழகத்தில் உள்ள வருவாய் மாவட்டத்தில் உள்ள 2 தொகுதிகளுக்கு ஒரு மாவட்டச் செயலர் என்றும், மாவட்டத்துக்கு ஒரு மாநில துணைப் பொதுச் செயலர் என்றும் நிர்வாகிகள் நியமிக்கப்பட்டிருந்தனர்.  இதேபோல் மாணவர் அணி, விவசாய அணி என்று ஒரு மாவட்டத்துக்கு 52 செயலர்கள் வீதம் 30 மாவட்டங்களில் 1560 மாவட்டச் செயலர்கள் இருந்தனர்.  இந்த நிர்வாகிகளுக்கு பக்குவமின்மையும், தொண்டர்களை அரவணைத்துப் போகும் மனப்பக்குவம் இல்லாததால் கட்சித் தொண்டர்களிடையை அதிருப்தி நிலவியது.  

             அதேபோல் தற்போது சட்டப்பேரவை உறுப்பினர்களாக உள்ள 18 பேரில் 7 பேருக்கு மட்டுமே இந்த தேர்தலில் வாய்ப்பளிக்கப்பட்டது. புதிதாக அறிவிக்கப்பட்ட பெரும்பாலான வேட்பாளர்கள் தொகுதியை சாராதவர்களாக இருந்தனர். உதாரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் மயிலம், செஞ்சி ஆகிய தொகுதிகளுக்கு வெளிமாவட்டங்களிலிருந்து வந்தவர்கள் போட்டியிட்டனர்.

             சில திமுக மாவட்டச் செயலர்கள் இப்பிரச்னையை ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் ஆகியோரின் கவனத்துக்கும், தங்கள் கட்சி தலைமைக்கும் கொண்டு சென்றனர். இதனால் பாமக தலைமை, சம்மந்தப்பட்ட நிர்வாகிகளை தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஒழுங்காக பணியாற்றக் கூறியும் பலர் ஈடுபாட்டுடன் செயல்படவில்லை.  

                இந்நிலையில் அண்மையில் முதல்வர் கருணாநிதியை சந்தித்த ராமதாஸிடம், தனது மனக்குறையை கருணாநிதி தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் ராமதாúஸ அதிர்ச்சியடைந்துள்ளார்.  இதனால் வந்த வேகத்தில் அனைத்து மாவட்டச் செயலர்களின் பதவிகளும் பறிக்கப்படுவதாகவும், மாநில துணைப் பொதுச் செயலர்களாக உள்ளவர்கள் ஒருங்கிணைந்த மாவட்டச் செயலர்களாக செயல்படுமாறும் தெரிவித்துள்ளார்.   வெளிப்படையாக அறிவிக்கப்படாமல் தனித்தனியாக தொலைபேசியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகம் முழுவதும் உள்ள 1560 மாவட்ட நிர்வாகிகளின் பதவி பறிக்கப்பட்டுள்ளது.

0 கருத்துகள்: