மு.க. பெரியசாமி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மு.க. பெரியசாமி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வன்னியர் சங்க மகளிர் மாநாடு: பூம்புகாரில் கால்கோள் நடும் விழா

சீர்காழி:

           நாகை மாவட்டம், பூம்புகாரில் வரும் 18ஆம் தேதி வன்னியர் சங்க மகளிர் மாநாடு நடைபெறவுள்ளது. இதையொட்டி, பூம்புகாரில் கால்கோள் நடும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.    

சுற்றுலா வளாகத்தில் நடைபெற்ற இந்த விழாவில் பூம்புகார் சட்டப்பேரவை தொகுதி உறுப்பினர் மு.க. பெரியசாமி தலைமை வகித்து பேசியது:    

               பூம்புகாரில் நடைபெறும் வன்னியர் சங்க மகளிர் மாநாட்டில் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ், முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி ராமதாஸ், மற்றும் கட்சியின் எம்.பி, எம்எல்ஏக்கள் பங்கேற்கின்றனர். இந்த மாநாட்டில் மகளிர் நலனுக்கான பல்வேறு தீர்மானங்களை நிறைவேற்றப்படவுள்ளன என்றார் அவர்.    கால்கோள் விழாவுக்கு பாமகவின் மாநில துணை பொதுச் செயலாளர் ஐயப்பன், வன்னியர் சங்கத்தின் மாநில துணைத் தலைவர் மூர்த்தி, கட்சியின் மகளிர் அணி மாநில செயலாளர் பானுமதி, நாகை மாவட்டச் செயலாளர் அகோரம், ஒன்றியச் செயலாளர்கள் செழியன், முத்துகுமார், மணிசெல்வம் உள்ளிட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் திரளான நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.